சென்னை கோயம்பேட்டில் உள்ள கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திய நடிகர் சூர்யா, கண்ணீர் விட்டு தேம்பி அழுதது காண்போரை கலங்க செய்தது.
நடிகர் விஜயகாந்தின் மறைவின் போது நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்ததால் அவர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாமல் போனது. இதையடுத்து நேற்று புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிய சூர்யா, இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தினார். அதன்பின் விஜயகாந்த் பற்றி பேசத் தொடங்கியதும் கண்ணீர்விட்டு அழுத சூர்யா, அவருடனான தன்னுடைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
அவர் பேசியதாவது : “அண்ணனோட பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்ப காலத்துல 4, 5 படங்கள்ல நடிச்சும் பெரிய பாராட்டு கிடைக்கல. பெரியண்ணா பட ஷூட்டிங் சமயத்துல அண்ணனோட நெருங்கி பழகுற வாய்ப்பு கிடைச்சது. அப்போ நான் விரதம் இருந்ததால் அசைவம் சாப்பிடாமல் இருந்தேன். ஒருநாள் என்னை அழைத்து இந்த வயசுல அசைவம் சாப்பிடலேனா உடம்புல தெம்பு இருக்காதுனு சொல்லி அவர் தட்டில் இருந்து எடுத்து எனக்கு ஊட்டிவிட்டார்.
இதையும் படியுங்கள்... நான் என்னை இசைஞானியாக நினைக்கவில்லை... அதில் எவ்வித கர்வமும் எனக்கில்லை - இளையராஜா ஓபன் டாக்
கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்திய சூர்யா
pic.twitter.com/TJObYjjVHN
அந்த படத்துல அவரோட இணைந்து பணியாற்றிய 8 நாளுமே நான் அவரை பிரம்மிச்சு தான் பார்த்தேன். கலை நிகழ்ச்சிக்காக மலேசியா சென்றபோது ஒவ்வொரு நாளும் அவருடைய துணிச்சலை பார்த்து நான் அசந்து போனேன். மறுபடியும் சந்தித்து அவருடன் பேச முடியவில்லையேனு நிறைய வருத்தம் இருக்கு. அவரைப்போல் இன்னொருவர் கிடையாது. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியாதது எனக்கு மிகப்பெரிய ஈடுசெய்ய முடியாத இழப்பு.
அண்ணனோட இழப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவருடைய குடும்பத்தாருக்கும், சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணனோட ஆத்மா சாந்தியடையனும்னு வேண்டிக்கொள்கிறேன். எப்போதும் அவருடைய நினைவில் இருப்போம். அதேபோல் நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்தின் பெயர் வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை வழுத்து வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சூர்யா, எல்லாரும் சேர்ந்து அந்த முடிவை எடுத்தால் தனக்கு சந்தோஷம் தான் என கூறிவிட்டு சென்றார்.
இதையும் படியுங்கள்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. ரிலீசுக்கு முன்பே மாஸ் காட்டும் சிவா - பல கோடிகளில் பிசினஸ் ஆனா அயலான்! எவ்வளவு?