வெறித்தனமான CG காட்சிகள்.. ஏலியனோடு கைகோர்த்து பூமியை காப்பாற்றும் சிவா - டக்கராக வெளியான அயலான் ட்ரைலர்!

Ansgar R |  
Published : Jan 05, 2024, 09:09 PM IST
வெறித்தனமான CG காட்சிகள்.. ஏலியனோடு கைகோர்த்து பூமியை காப்பாற்றும் சிவா - டக்கராக வெளியான அயலான் ட்ரைலர்!

சுருக்கம்

Ayalaan Trailer : சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அயலான் திரைப்படத்தின் ட்ரைலர் இப்பொது வெளியாகியுள்ளது. CG காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வருகின்ற பொங்கல் ரிலீஸ் படமாக வெளியாகவுள்ள திரைப்படம் தான் "அயலான்". இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகளில் உதவியுள்ளார் பிரபல நடிகரான மணிகண்டன் என்றும் கூறப்படுகிறது. அயலான் படம் சிவகார்த்திகேயனின் 14வது திரைப்படமாக வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது . 

அயலான். கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற துவங்கியது. 
ஆனால் அப்போது போதிய தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காரணத்தால் தொடர்ச்சியாக இந்த படத்தின் படபிடிப்பு தள்ளிப்போனது. இந்நிலையில் சுமார் 6 ஆண்டுகள் காத்திருப்பதற்குப் பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த படத்திற்கான பணிகள் துவங்கியது. 

Poornima: கமல் கழுவிகழுவி.. ஊத்துனத்துக்கே இந்த அலப்பறையா? ஆளுயர மாலை... தெருவில் குத்தாட்டம் போட்ட பூர்ணிமா!

இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் இல்லாத அளவிற்கு சுமார் 4000க்கும் அதிகமான விசுவல் எபக்ட்ஸ் காட்சிகளை கொண்டு உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் "அயலான்" என்றும்  ஒரு தகவல் கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. இந்த படத்திற்கு இசை புயல் ரகுமான் இசையமைத்துள்ளது பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் நிலையில் இப்பொழுது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியுடன் இணைந்து பூமியை காப்பாற்ற சிவகார்த்திகேயன் எப்படி போராடுகிறார்? அவர்கள் இருவருக்குள் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என்னென்ன? என்பதை காமெடி கலந்த ஒரு சயின்ஸ் பிக்சன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் ரவிக்குமார்.

அடேங்கப்பா... டைட்டில் வின்னரை கூட இப்படி வரவேற்க மாட்டாங்க! பணத்தோடு வெளியேறிய பூர்ணிமாவுக்கு ஜோரான வரவேற்பு!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!