பொன்னியின் செல்வன் பாடல் வெளியீட்டு விழாவிற்கு அழைப்பு விடுத்த ஜெயம் ரவி...

By Kanmani P  |  First Published Jul 30, 2022, 7:43 PM IST

தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த பாடல் வெளியாகிறது. சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து நாளை மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியாகிறது.


பிரபல இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் மட்டும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றனர். 1955 ஆம் ஆண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், பார்த்திபன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் ஜொலித்துள்ளனர்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்து உள்ள இந்த படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றிருந்தது. இந்த படத்தில் சோழ வம்சத்தின் பட்டத்து இளவரசன் ஆதித்ய கரிகாலனாக விக்ரமும், அருள்மொழி வர்மன் ஆக ஜெயம் ரவியும், மூத்த சகோதரியாக ஐஸ்வர்யா ராய் பச்சன் இரட்டை வேடத்திலும், வந்திய தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும் தோன்றவுள்ளதாக முன்னதாக வெளியான போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

அதோடு  சோழ வம்சத்தை சேர்ந்த இளவரசர்கள், இளவரசிகள், தோழர்கள் என நம் ஊர் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்த இந்த படத்தின் டீசர் மூலம் படம் கண்டிப்பாக ஆயிரம்  கோடியை தொடும் என ரசிகர்கள் கூறிவந்தனர்.

மேலும் செய்திகளுக்கு...கார்த்தியின் விருமன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய சூர்யா.. எப்ப ரிலீஸ் தெரியுமா?

மேலும் செய்திகளுக்கு...செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்... நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்

ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்நிலைகள் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதல் பாடலாக பொன்னியின் நதி பாடல் நாளை (ஜூலை 31) வெளியிடப்பட உள்ளது. இளங்கோ கிருஷ்ணன் எழுதிய இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த பாடல் வெளியாகிறது. சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ என்ற வணிக வளாகத்தில் வைத்து நாளை மாலை 6 மணிக்கு ரசிகர்கள் முன்னிலையில் இந்த பாடல் வெளியாகிறது.

மேலும் செய்திகளுக்கு...கிளாமருக்கு தாவிய பிரியா பவானி சங்கர்...குட்டை டவுசரில் கலக்கல் ஹாட் போஸ்..

Join us to celebrate the launch of at 6pm tomorrow at Express Avenue Mall, Chennai! ⚔️🎶 pic.twitter.com/nAfYG63MXF

— Lyca Productions (@LycaProductions)

 

இந்த நிகழ்வில் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இது குறித்து  சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ஜெயம் ரவி நாளை நடைபெற உள்ள பாடல் வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்களை அழைத்து காணொளியை பகிர்ந்துள்ளார்.

click me!