
அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊதிய உயர்வு, பணி நியமனம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனால் அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இன்றி அவதியில் உள்ளனர்.
இந்த நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் பாதிக்கப்பட்ட பள்ளிகளில் ஒன்றான திருப்பூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் விஜய் ரசிகர்களின் முயற்சியால் 2 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகிறார்கள்.
இதனால் அந்த குறிப்பிட்ட பள்ளியின் மாணவர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி கல்வி பயின்று வருகிறார்கள். விஜய் ரசிகர்களின் இந்த அதிரடி முடிவுக்கு ஒரு தரப்பினர் பாராட்டுக்கள் தெரிவித்து வந்தாலும்.
மற்றொரு தரப்பினர் இவர்களுடைய செய்கையால் அதிர்ச்சியடைந்து உள்ளனர். விஜய் ரசிகர்களுக்கு எதிராக கண்டனங்களும் குவிந்து வருகிறது. ஆசிரியர்கள் தங்கள் வாழ்வாதாரப் பிரச்சினைக்காகப் போராடிக் வரும் நிலையில், போராட்டத்தின் பாதிப்பைக் குறைக்கும் நோக்கத்தில் விஜய் ரசிகர்கள் நடந்து கொள்வதா?என சிலர் சமூக வலைத்தளத்தில் வசைபாடி வருகிறார்கள்.
திரையுலகில், வேலை நிறுத்தம் என்றால் எப்போதும் உங்கள் தளபதி விஜய் அதனை எதிர்க்கும் நோக்கத்துடன் எதையும் செய்ததில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.