மாணவர்கள் பலம் அறிந்து..... ஏமியிடம் கெஞ்சும் பிரமாண்ட இயக்குனர்....!!!

 
Published : Jan 27, 2017, 06:25 PM ISTUpdated : Sep 19, 2018, 03:01 AM IST
மாணவர்கள் பலம் அறிந்து..... ஏமியிடம் கெஞ்சும் பிரமாண்ட இயக்குனர்....!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியுள்ள பீட்டா அமைப்பில் இருக்கும் அணைத்து நடிகர்கள்,  நடிகைகளுக்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிலும் பலர் தங்களுக்கு எதிராக செயல்படும் நடிகர்கள் படங்களை இங்கு திரையிட விடமாட்டோம் என்றும், மீறி வெளிவந்தாலும் அந்த படங்களை புறக்கணிக்க போவதாக கூறியுள்ளனர்.

இதன் காரணமாக அந்த அமைப்பில் நாங்கள் இல்லை என  தனுஷ், திரிஷா, விஷால், ஆர்யா, கீர்த்திசுரேஷ் போன்ற பலர் தெரிவித்துள்ளனர்.

அதே போல  ரஜினி குடும்பத்திலும் இருக்கும் அனைவரும் பீட்டாவில் உள்ளனர் என சமூகவலைதளங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து தெரிவித்த  சௌந்தர்யா ரஜினிகாந்த் அதை முற்றிலும்  மறுத்தார். 

இந்நிலையில் திஷாவை அடுத்து கடந்த வருடம் பீட்டாவில் மற்றொரு  தூதுவராக நடிகை எமிஜாக்சன் சேர்க்கபட்டார், இப்போது அவர் பீட்டா அமைப்பின் தூதுவராக தான் உள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் தற்போது ரஜினி நடிக்கும் 2.0 படத்தில் இவர் நாயகியாக நடிப்பதால் இந்த படத்தின்  இயக்குனர் சங்கர் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பலத்தை அறிந்து எமி ஜாக்சனை பீட்டா அமைப்பில் இருந்து  அவரை  விலகச்சொன்னதாகவும், அதற்கு எமிஜாக்சன் மறுப்பு தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஒரு வேலை எமி ஜாக்சன் பீட்டாவில் இருந்து கொண்டே, 2.0 படம் வெளிவந்தால் இந்த படத்தை வெளியிடுவதில் பல சிக்கல்கள் இருக்கும், இந்த படத்தை மாணவர்களும், இளைஞர்களும் ஒரு வேலை புறக்கணிக்கலாம் என்றும்  கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

6 மாஸ் படங்களின் சாதனையை தவிடு பொடியாக்கிய 'துரந்தர்'! பாக்ஸ் ஆபீஸில் புதிய வரலாறு!
அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு