SK 21 First Look Teaser : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 21வது படத்தின் First Look Teaser விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017ம் ஆண்டு வெளியான ரங்கூன் என்ற படத்தை இயக்கி தமிழ் திரையுலகில் இயக்குனராக களமிறங்கிவர் தான் ராஜ்குமார் பெரியசாமி. அதற்கு முன்னதாக ஒரு சில படங்களில் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 21வது படத்தை ராஜ்கமல் நிறுவனத்தின் கீழ் அவர் இயக்கி வருகிறார்.
இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் திரைப்படமாக வெளியான சிவகார்த்திகேயனின் "அயலான்" திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் கொண்டாடும் வெற்றியாக இந்த திரைப்படம் மாறி உள்ளது என்றே கூறலாம். தமிழ் திரையுலகில் சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க துவங்கி இன்று முன்னணி ஹீரோ என்கின்ற அந்தஸ்துக்கு உயர்ந்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.
அவர் முதல் முதலாக உலகநாயகன் கமல்ஹாசன் அவருடைய ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் அவரது 21 வது படத்தை நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ஒரு ராணுவ வீரரின் கதாபாத்திரத்தை ஏற்று அவர் நடித்து வருவதாகவும், இந்த திரைப்படத்தில் அவர் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.
பிரபல நடிகை சாய் பல்லவி இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் விரைவில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது. இது ஒரு புறம் இருக்க, சிவகார்த்திகேயனை வைத்து "டாக்டர்" என்கின்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவர்கள் தனது twitter பகுதியில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் SK21 குறித்து கூறியுள்ளார்.
Woah!!!! Just saw first look teaser!! It’s complete rage ! Can’t wait for the world to see what you have made on this emotional journey 👏👏 big applause to team !
— Nelson Dilipkumar (@Nelsondilpkumar)தான் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தினுடைய பர்ஸ்ட் லுக் டீசரை பார்த்து விட்டதாகவும், உண்மையில் அது சிவகார்த்திகேயனை வேறு ஒரு பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றும் மக்கள் அனைவரும் இதை பார்த்து உற்சாகம் அடைவார்கள் என்றும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார்.