
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேக விழா நாளை மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. உலகமே உற்றுநோக்கியுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாட்டின் முக்கிய பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், திரைப் பிரபலங்களுக்கு விழா குழு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அயோத்தி - ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் சென்னையில் உள்ள இல்லத்தில் நடிகர்
ரஜினிகாந்தை நேரில் சந்தித்து, கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில், விழாக்குழுவின் அழைப்பை ஏற்று அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் இருந்து இன்று புறப்பட்டார்.
இதையும் படியுங்கள்... அயோத்திக்கும் ராமேஸ்வரம் தனுஷ்கோடி அரிச்சல் முனைக்கும் என்ன தொடர்பு?
விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ரஜினிகாந்துடன் அவரது மனைவி லதா, சகோதரர் சத்யநாராயானா உள்ளிட்டோரும் புறப்பட்டனர். 22-ஆம் தேதி முழுவதுமாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மறுநாள் 25-ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினி கிளம்பியதை அடுத்து சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் தனுஷ், அங்கிருந்து விமானம் மூலம் உத்தர பிரதேசம் கிளம்பி சென்றார். அவரும் நாளை நடைபெற உள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள உள்ளார். இதுதவிர மேலும் சில தமிழ் திரையுலக பிரபலங்களும் அயோத்திக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ராமர் கோயில் கும்பாபிஷேகம்.. ஜனவரி 22-ம் தேதி இந்த ராசிக்காரர்களுக்கு செம ஜாக்பாட்.. உங்க ராசிக்கு என்ன?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.