Actress Shakila : பிரபல நடிகை ஷகீலா, தனது வளர்ப்பு மகளான ஷீத்தல் தன்னை கொடூரமாக தாக்கி கீழே தள்ளிவிட்டதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
மலையாள சினிமாவில் 1980களில் இறுதியில் கொடி கட்டி பறந்த நடிகை தான் ஷகிலா. தமிழ் மொழியிலும் கவர்ச்சி நாயகியாக இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான "குக் வித் கோமாளி" என்கின்ற நிகழ்ச்சி, இவர் மேல் இருந்த ஒட்டு மொத்த பிம்பத்தை தலைகீழாக மாற்றியது என்றால் அது மிகையல்ல.
அதுவரை கவர்ச்சி நாயகியாக விளங்கி வந்த சகிலா, அன்று முதல் பலரால் அம்மா என்று அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகை ஷகிலா அவர்கள் தனது அண்ணன் மகளான சீத்தலை 6 மாத குழந்தையாக இருந்ததிலிருந்து எடுத்து வளர்த்து வருகிறார். தற்பொழுது பெரிய பெண்ணாக வளர்ந்து விட்ட சீத்தலும் தனது தாய் ஷகீலா தான் என்று பல மேடைகளில் பேசி உள்ளது அனைவரும் அறிந்ததே.
undefined
ராஷ்மிக்காவின் Deep Fake வீடியோ.. உருவாக்கியது ஏன்? கைதான 24 வயது நபர் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்!
இந்நிலையில் இன்று ஜனவரி 20ஆம் தேதி ஷீத்தல் மற்றும் அவரது வளர்ப்பு தாயான ஷகிலா ஆகிய இருவரின் குடும்பத்தினிடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த தகராறு முற்றிய நிலையில் ஷகிலா மற்றும் அவரது பெண் வழக்கறிஞர் ஆகிய இருவரையும் ஷீத்தல் கொடூரமாக தாக்கி கீழே தள்ளியதாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நடிகை ஷகீலாவை தாக்கிவிட்டு கோடம்பாக்கத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு ஷீத்தல் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஷகிலாவின் வளர்ப்பு மகளான ஷைத்தல், அவரின் தாய் மற்றும் அவரது சகோதரி ஆகிய மூவரும் தான் ஒன்றிணைந்து நடிகை ஷகிலாவை தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஷீத்தல் உள்பட மூவர் மீதும் கோடம்பாக்கம் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது, இது குறித்த விசாரணை தற்போது நடந்து வருகிறது. ஷகிலாவின் பெண் வழக்கறிஞர்களும் இந்த நிகழ்வில் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.