Rashmika Mandanna : நடிகை ரஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ கடந்த ஆண்டு நவம்பரில் சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோ ஒட்டுமொத்த மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோவுக்கு காரணமான நபரை இன்று ஜனவரி 20ம் தேதி கைது செய்துள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது, சமூக ஊடக தளங்களில் உள்ள கட்டுப்பாடுகளுக்கான அவசியத்தை இது தூண்டியது என்றே கூறலாம்.
இந்த கேள்விக்குரிய டீப் ஃபேக் வீடியோ, ஆரம்பத்தில் பிரிட்டிஷ்-இந்திய Influencer ஜாரா படேலைக் காட்சிப்படுத்தியது. வெளியான அந்த வீடியோவில் கருப்பு உடையில் அவர் லிப்டில் நுழைவது போல அமைக்கப்பட்டிருந்தது. டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், திருமதி படேலின் முகம் மந்தனாவின் முகமாக மாற்றப்பட்டது.
இதனையடுத்து இந்த விஷயத்திற்காக தனது வருத்தத்தை வெளிப்படுத்திய நடிகை மந்தனா, இந்த சோதனையை "மிகவும் பயங்கரமானது" என்று விவரித்தார் மற்றும் தொழில்நுட்பத்தை தவறாகப் பயன்படுத்துவதால் தனிநபர்கள் எதிர்கொள்ளும் பாதிப்புகளை எடுத்துக்காட்டினார். தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் இன்று நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் பயமாக இருக்கிறது," என்று அவர் குறிப்பிட்டார்.
வைரலான அந்த டீப்ஃபேக் வீடியோவின் பின்விளைவுகள், சமூக ஊடக தளங்களுக்கு ஒரு ஆலோசனையை வழங்க மத்திய அரசை தூண்டியது. டீப்ஃபேக்குகளை உள்ளடக்கிய சட்ட விதிகள் மற்றும் அவற்றின் உருவாக்கம் மற்றும் பிற தொடர்புடைய விஷயங்களை சரிசெய்ய மக்கள் பலரும் எதிர்ப்பு குரல் எழுப்பினர். பல்வேறு நடிகர்களும் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
இதனையடுத்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், டிசம்பரில் சமூக ஊடக தளங்களைச் சந்தித்து தவறான தகவல்கள் மற்றும் Deep Fakeஐ கையாள்வதில் அவர்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார். இந்நிலையில் இந்த விஷயத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைதாகியுள்ளது பல கேள்விகளுக்கு முற்றுப்புள்ளியாக அமையும்.