தனுஷ் - நாகார்ஜுனா நடிக்கும் படத்திற்கு இசையமைக்கும் தேசிய விருது இசையமைப்பாளர்! வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

By manimegalai a  |  First Published Jan 20, 2024, 5:02 PM IST

தனுஷ் மற்றும் நாகர்ஜுனா இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கும் 'DNS' படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
 


தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் தேசிய விருது பெற்ற இயக்குனர் சேகர் கம்முலா ஆகியோரின் கூட்டணியில் கலகலப்பான படைப்பான #DNS சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. மேலும் படத்தின் அறிவிப்பு வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக நடந்த படப்பிடிப்பிலும் தனுஷ் கலந்து கொண்டார். அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்.எல்.பி (ஏசியன் குரூப்) சார்பில் ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசியுடன் சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் இப்படத்தை தயாரிக்கின்றனர். சோனாலி நரங் படத்தை வழங்குகிறார்.

Tap to resize

Latest Videos

விஜயகாந்த் மரண செய்தி கேட்டு கதறிய வடிவேலு, நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வராததன் காரணம் இதுவா? சரத்குமார் பேச்சு

இந்தப் படத்திற்கு 'ராக்ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார் என்பதை படக்குழு தற்போது உறுதி செய்துள்ளது. விவேகமான மற்றும் வலுவான கதைக்கரு கொண்ட திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சேகர் கம்முலாவுடன் தேவி ஸ்ரீ பிரசாத் இணைவது இதுவே இதுமுறை. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் வலுவான கதையை கொண்ட திரைப்படங்களுக்கு பரபரப்பான ஆல்பங்களை வழங்கியுள்ளார். மேலும் அவர் #DNS-க்காக ஒரு அதிரடியான பாடல்களை வழங்குவார் என்பது உறுதி.

Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். ராமகிருஷ்ணா சபானி மற்றும் மோனிகா நிகோத்ரே தயாரிப்பு வடிவமைப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். அடுத்தடுத்து இப்படம் குறித்து வெளியாகும் தகவல்கள் படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!