வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு தூசுதட்டப்படும் பிரம்மாண்ட படம் - ஹீரோ யாரு தெரியுமா?

Ansgar R |  
Published : Jan 20, 2024, 04:24 PM IST
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்.. 12 ஆண்டுகளுக்கு பிறகு தூசுதட்டப்படும் பிரம்மாண்ட படம் - ஹீரோ யாரு தெரியுமா?

சுருக்கம்

Vels Film International : தமிழ் திரையுலகில் பல நல்ல திரைப்படங்களை கொடுத்த ஒரு தயாரிப்பு நிறுவனம் தான் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல். ஐசரி கணேசன் அவர்கள் தான் இதன் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே மிகப்பெரிய நடிகராக விளங்கி வந்தவர் தான் ஐசரி வேலன். இவர் தமிழ்நாட்டில் எம்எல்ஏ-வாகவும் பதவி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருடைய மகன் ஐசரி கணேசன் அவர்கள் தற்போது வேல்ஸ் யுனிவர்சிட்டியின் சேர்மேனாக பதவி வகித்து வருகின்றார். அதேபோல சினிமா துறையிலும் அவர் பல்வேறு முன்னெடுப்புகளை கடந்த பல ஆண்டுகளாகவே செய்து வருகிறார். 

இந்த சூழ்நிலையில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த 2000 ஆவது ஆண்டு பிரபல நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான "டபுள்ஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் கணேசன் திரைப்பட தயாரிப்பாளராக தமிழ் திரை உலகில் களமிறங்கினார். அதன் பிறகு "வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்" என்கின்ற பெயரில் பல நல்ல திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Arjun Meet Modi: பாஜக கட்சியில் இணைந்தது உண்மையா? மோடியை சந்தித்து அர்ஜுன் வைத்த கோரிக்கை.!

குறிப்பாக ஜெயம் ரவியின் "போகன்" மற்றும் "கோமாளி", விஜய் சேதுபதியின் ஜூங்கா, பிரபுதேவாவின் "தேவி" மற்றும் "தேவி 2", ஆர் ஜே பாலாஜியின் "எல்கேஜி" மற்றும் "சிங்கப்பூர் சலூன்" உள்ளிட்ட உள்கின்ற பல திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டது வேல் நிறுவனம் தான். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அவர்களுடைய தயாரிப்பில் உருவாகும் பல திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. 

குறிப்பாக ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் உருவான "பிடி சார்", வருண் நடிப்பில் உருவான "ஜோஸ்வா" மற்றும் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான "சுமோ" உள்ளிட்ட திரைப்படங்கள் இன்னும் வெளிவராமல் காத்திருக்கிறது. இந்த சூழலில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய வேல்ஸ் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேசன் அவர்கள், கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக துவங்கிய ஒரு பிரம்மாண்ட திரைப்படம் குறித்து தகவல்கள் வெளியிட்டுள்ளார். 

பல சிஜி தொழில்நுட்ப காட்சிகள் அந்த திரைப்படத்தில் இருப்பதாகவும் தற்பொழுது மீண்டும் அந்த பட பணிகள் துவங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த படத்திற்கான படபிடிப்பு முழுமையாக முடிந்துள்ள நிலையில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு பீரியட் படமாகவும், ஹாரர் கலந்த காமெடி படமாக அது இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

அந்த படத்தின் நாயகன் குறித்து அவர் எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை என்றாலும் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக துவங்கிய படம் தான் அது என்கின்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை விரைவில் வேல் நிறுவனம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

Meena Photos: இவங்களுக்கு 47 வயசுனு சொன்னா யார் நம்புவாங்கா.. டீன் ஏஜ் பெண்களுக்கு சவால் விடும் அழகில் மீனா!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை வீட்டை விட்டு துரத்த விஜயா போடும் புது பிளான்... ரோகிணிக்கு சிக்கல் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
போலீஸ் விசாரணையில் விசாலாட்சி கொடுத்த ட்விஸ்ட்... கொற்றவையிடம் என்ன சொன்னார்? எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்