இசைவாணியை வாழ்த்திய இசைஞானி... தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டு...!

By Kanimozhi Pannerselvam  |  First Published Dec 4, 2020, 3:08 PM IST

அதுமட்டுமின்றி இசைவாணியை பாடச்சொல்லி பெருமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார்.


தமிழ் திரையுலகில் அட்டகத்தி படம் மூலம் அறிமுகமாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குநர் பா.ரஞ்சித். இவரது “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசைக்குழுவின் பாடகி இசைவாணி. சமீபத்தில் இசைவாணி உலகின் சிறந்த 100 பெண்களில் ஒருவராக பிபிசியால் தேர்வு செய்யப்பட்டார். பெண்கள் கால்பதிக்கத் தயங்கும் கானா இசைத்துறையில் சிறந்து விளங்கி வருவதற்காக இந்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்தது. 

Tap to resize

Latest Videos

undefined

 

இதையும் படிங்க: பாகுபலியையே பந்தாடிய சூர்யா... “சூரரைப் போற்று” வசூல் எத்தனை கோடி தெரியுமா?

இந்தியாவில் இருந்து இப்பட்டியலில் இடம்பிடித்த ஒரே பெண் என்ற பெருமையும் இசைவாணிக்கு கிடைத்துள்ளது. இதனால் திரையுலகினர் பலரும் இசைவாணிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். இதையடுத்து இசையுலகின் ராஜாவான இசைஞானி இளையராஜாவும் இசைவாணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இசைவாணியை தனது வீட்டிற்கு அழைத்து இசைஞானி தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: அன்று முதல் இன்று வரை துளியும் குறையாத இளமை... நடிகை நதியாவின் முதல் போட்டோ ஷூட்டை பார்த்திருக்கீங்களா?

அதுமட்டுமின்றி இசைவாணியை பாடச்சொல்லி பெருமையாக ரசித்துக் கேட்டிருக்கிறார். இசைஞானியின் இசையில் வெளிவந்த பாடல்களான “ஆராரோ பாட வந்தேனே, ஆவாரம் பூவின் செந்தேனே” மற்றும் “கானக் கருங்குயிலே” ஆகிய பாடல்களை பாடிக் காண்பித்திருக்கிறார் இசைவாணி. மேலும், “ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது” என்று கூறியதோடு, இன்னும் இதுபோல் பல சாதனைகள் படைக்க இசைவாணிக்கும், தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவினருக்கும் இளையராஜா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

click me!