தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் வரும் 4 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட வாரிசு படம் ரிலீஸுக்கு முன்னதாகவே டிஜிட்டல் உரிமை, ஆடியோ உரிமை, டப்பிங் உரிமை, திரையரங்கு உரிமை, திரையரங்கு அல்லாத உரிமை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு திரையரங்கு உரிமை என்று ஒட்டு மொத்தமாக ரூ.400 கோடி வரையில் வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
வாரிசு படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து ஜெயசுதா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், கணேஷ் வெங்கட்ராமன், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சதீஷ், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீமன், சம்யுக்தா, விடிவி கணேஷ், ஹர்ஷிதா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். அண்மையில் தான் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே, தீ தளபதி, சோல் ஆஃப் வாரிசு, ஜிமிக்கி பொண்ணு, வா தலைவா ஆகிய பாடல்கள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் வாரிசு படத்தின் டிரைலர் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு மாறாக படத்தின் புகைப்படம் மட்டும் வெளியாகி வருகிறது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 12 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், வாரிசு டிரைலர் குறித்து படக்குழு தற்போது வரையில் மௌனம் காத்து வருகிறது. இந்த நிலையில், வரும் 4 ஆம் தேதி வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. எனினும், இது குறித்து முக்கியமான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகும் வரலட்சுமி சரத்குமாரின் ‘கொன்றால் பாவம்’