கவர்ச்சியை தவிர உனக்கு என்ன தெரியும்னு கேட்டவர்களுக்கு... வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா

Published : Jan 02, 2023, 01:57 PM IST
கவர்ச்சியை தவிர உனக்கு என்ன தெரியும்னு கேட்டவர்களுக்கு... வீடியோ வெளியிட்டு தரமான பதிலடி கொடுத்த தர்ஷா குப்தா

சுருக்கம்

நடிகை தர்ஷா குப்தா, இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உனக்கு கவர்ச்சியை தாண்டி என்ன தெரியும் என சிலர் கிண்டலடித்துள்ளனர்.

சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை தர்ஷா குப்தா, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வந்த தர்ஷாவுக்கு சினிமாவிலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

அந்த வகையில், இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் ருத்ரதாண்டவம். திரெளபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கியிருந்த இப்படத்தில் ரிஷிக்கு ஜோடியாக நடித்திருந்தார் தர்ஷா. முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து அவர் நடித்த படம் ஓ மை கோஸ்ட். இப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... இது ஒரு காவிய காதல்.... புத்தாண்டு பிறந்ததும் குட் நியூஸ் சொன்ன சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்

சன்னி லியோன் கதையின் நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் தர்ஷா குப்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் தர்ஷா குப்தா பேயாகவும் நடித்துள்ளார். இவர் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை பார்த்து, உனக்கு கவர்ச்சியை தாண்டி என்ன தெரியும் என சிலர் கிண்டலடித்துள்ளனர்.

அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக ஓ மை கோஸ்ட் படத்தில் தான் நடித்த ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தர்ஷா. கவர்ச்சியை தாண்டி உங்களின் உழைப்பையும் நடிப்புத் திறனையும் காட்டுங்கள் என்று கூறிய அனைவருக்கும் இந்த ஓஎம்ஜி படத்தின், BTS வீடியோவை சமர்ப்பிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த காட்சி படமாக்கப்பட்டபோது காலையிலிருந்து மாலை 6 மணிவரை ஒரு சொட்டி தண்ணிகூட குடிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், கடின உழைப்பின்றி எதுவும் ஈஸியாக நடந்து விடாது என தன்னைப்பற்றி விமர்சனம் செய்தவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... உங்களுக்கும் பொறுப்பு இருக்கு... நல்லா ஜம்முனு டிரெஸ் பண்ணிட்டு வாங்க - விஜய்க்கு பிரபல இசையமைப்பாளர் அட்வைஸ்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சூரி; ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!