
நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள இப்படத்தில் நடிகர் அஜித் உடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கோகேன், பிரேம், வீரா, சிபி சந்திரன், அமீர், பாவனி, ஜிபி முத்து என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ஒரு நல்ல படத்துக்கு புரமோஷனே தேவையில்லை என அஜித் சொன்னாலும், இப்படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் புரமோஷன் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக இப்படத்திற்கு வெளிநாடுகளில் வேறலெவலில் புரமோஷன் செய்யப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... நண்பன் விஜயகாந்த்தை சந்தித்து... கன்னத்தை கிள்ளி முத்தம் கொடுத்த சத்யராஜ் - வைரலாகும் வீடியோ
சமீபத்தில் துபாயில் ஸ்கை டைவிங் செய்து வானில் துணிவு பட பேனரை பறக்கவிட்டு மாஸாக வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில், தற்போது துணிவு படத்தை மலேசியாவில் வெளியிடும் மாலிக் ஸ்டிரீம்ஸ் என்கிற நிறுவனம், அப்படத்திற்கான புரமோஷன் பணிகளையும் ஒருபக்கம் பிரம்மாண்டமாக செய்து வருகிறது.
அந்த வகையில், துணிவு படத்தின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கண்டெயினர் மற்றும் விதவிதமான சொகுசு கார்களில் மலேசியா முழுக்க வலம் வந்து அங்குள்ள அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டி உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மலேசியாவில் துணிவு படத்தை வெளியிடும் மாலிக் ஸ்டிரீம்ஸ் என்கிற நிறுவனம் தான் செய்துள்ளது. இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... இது ஒரு காவிய காதல்.... புத்தாண்டு பிறந்ததும் குட் நியூஸ் சொன்ன சமந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.