நாக சைதன்யா மற்றும் வெங்கட்பிரபுவின் 'கஸ்டடி' படத்தில் இருந்து பரபரப்பான க்ளிம்ப்ஸி வீடியோ வெளியானது!

By manimegalai a  |  First Published Jan 1, 2023, 5:34 PM IST

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு படத்தை தொடர்ந்து இயக்கி வரும், கஸ்டடி படத்தில் இருந்து, க்ளிம்ப்ஸி வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 


இளமையும் திறமையும் மிக்க நடிகர் நாக சைதன்யா தற்போது பிளாக்பஸ்டர் வெற்றி இயக்குநரான வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'கஸ்டடி'யில் நடித்து வருகிறார். கிரீத்தி ஷெட்டி படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. 

சமீபத்தில் வெளியான இந்தத் திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. சிவாவின் அதிரடி ஆக்‌ஷன் உலகை அறிமுகப்படுத்தும் விதமாக படத்தின் க்ளிம்ப்ஸை புது வருட பரிசாக பார்வையாளர்களுக்கு படக்குழு வெளியிட்டுள்ளது. நாகசைதன்யாவின் பயமில்லாத ஆக்‌ஷன் தோற்றம் மற்றும் படத்தின் சில விஷூவல்களையும் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. 

Tap to resize

Latest Videos

'அர்ஜுன் ரெட்டி' பட இயக்குனர் இயக்கத்தில்... ரன்பீர் கபூர் - ராஷ்மிகா நடிக்கும் 'அனிமல்' ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

தற்போது வெளியாகியுள்ள க்ளிம்ப்ஸில் வசனங்கள் ஏதும் இல்லை என்றாலும் இந்த ஆக்‌ஷன் பேக்ட் டீசர் புராஜெக்ட்டின் தரத்தை காட்டுகிறது. இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை க்ளிம்ப்ஸின் தரத்தை மேலும் உயர்த்துவதாக உள்ளது. மேலும், இது படத்தின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. 

20 மில்லியனை நெருங்கும் 'துணிவு' படத்தின் ட்ரைலர்! யூ டியூப்பில் அடித்து நொறுக்கும் சாதனை!

அரவிந்த்சாமி, ப்ரியாமணி, சரத்குமார், வெண்ணிலா கிஷோர் மற்றும் ப்ரேம்ஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

'கஸ்டடி' திரைப்படம் மே 12, 2023-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. அதிக பொருட்செலவிலான தயாரிப்பு மற்றும் உயர்தரமான தொழில்நுட்பத்துடன் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி படத்தைத் தயாரித்துள்ளார். மாஸ்ட்ரோ இளையராஜா மற்றும் லிட்டில் மாஸ்ட்ரோ யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பவன் குமார் இந்த படத்தை வழங்குகிறார்.

'வாரிசு' படத்தின் ட்ரைலரை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு... போஸ்ட்டரை வெளியிட்டு ஏமாற்றம் கொடுத்த படக்குழு!

click me!