இயக்குனர் வெங்கட் பிரபு கைது செய்யப்பட்டதாக கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக, ஒரு தகவல் சமூக வலைதளத்தில் தீயாக பரவி வந்த நிலையில், இதற்கான உண்மை காரணம் என்ன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் அறியப்பட்டவர் வெங்கட் பிரபு. இசையமைப்பாளர் இளைய ராஜாவின் சகோதரர், கங்கை அமரனின் மகனான வெங்கட் பிரபு. தன்னுடைய குடும்பமே இசை குடும்பமாக இருந்தாலும், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, இயக்குனராக வெள்ளித்திரையில் அவதாரம் எடுத்தார். இவரின் மிகப்பெரிய பிளஸ் என்றால், தற்போதைய இளைஞர்களுக்கு ஏற்ற போல் மிகவும் கேஷுவலான கதையை இயக்கி ஹிட் கொடுப்பது தான்.
அந்த வகையில் இவர் இயக்கத்தில், மிர்ச்சி சிவா,விஜய் வசந்த், ஜெய், ஆகிய பல பிரபலங்கள் நடித்து வெளியான சென்னை600028 திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கினாலும், வெங்கட் பிரபுவுக்கு மிகப்பெரிய பிரேக் கொடுத்தது என்றால் அது, கடந்த ஆண்டு 2020 ஆம் ஆண்டு நடிகர் சிம்புவை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய, மாநாடு திரைப்படம் தான். இப்படம் வெளியாகி சுமார் 100 கோடி வரை வசூலை வாரி குவித்தது.
குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி இது? கொசுவலையை போன்ற உடையில் சிண்ட்ரெல்லா பொம்மை போல் கியூட் போஸ்!
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் வெங்கட் பிரபு... தமிழ் - தெலுங்கு என இருமொழிகளில், நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் ‘கஸ்டடி’ திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது . இதில் நாக சைதன்யாவின் அசுரத்தனமான கதாபாத்திர அவதாரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த படத்தில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக, கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். அரவிந்த் சுவாமி வில்லனாக நடிக்க, ப்ரியாமணி வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சரத்குமார், சம்பத்ராஜ், ப்ரேம்ஜி, வெண்ணிலா கிஷோர், ப்ரேமி விஷ்வநாத் மற்றும் பலர் நடிக்கின்றனர். அக்கினேனி இதுவரை கதாநாயகனாக நடித்தப் படங்களிலேயே ‘கஸ்டடி’ அதிக பொருட்ச்செலவில் உருவாகி வரும் படம். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
குறையாத கலெக்ஷன்..! 8 நாட்களில் பத்து தல-யை பந்தாடிய 'விடுதலை'..! வசூல் விவரம் இதோ..
இந்த ஆண்டு மே 12, ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின் வித்தியாசமான புரோமோ ஒன்றை வெளியிட்டு, ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வரும் 10.4.2023 அன்று வெளியாகும் என தெரிவித்துள்ளனர். இந்த வித்தியாசமான புரோமோஷன் வீடியோ, சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.