
கே.ஜி.எஃப் 2 ரிலீசுக்கு ரெடி
நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீசான கே.ஜி.எப் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது. பிரசாந்த் நீல் இயக்கி இருந்த இப்படம் பான் இந்தியா படமாக வெளியாகி அனைத்து மொழிகளிலும் அமோக வரவேற்பை பெற்றது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.
ஏப்ரல் 14-ல் வெளியீடு
இப்படத்தில் யாஷுக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கடந்த ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் கொரோனா பரவல் காரணமாக ரிலீசாகாமல் இருந்தது. தற்போது இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது.
டூஃபான் பாடல்
படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று கே.ஜி.எஃப் 2 படத்தில் இடம்பெறும் டூஃபான் என்கிற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 11 பாடகர்கள் இணைந்து பாடியுள்ள இந்த பாடலில் சில வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
விஜய்யை சீண்டும் வசனம்
அதில் இடம்பெறும் ‘நீங்க மட்டும் அவன் குறுக்க போயிடாதீங்க சார்’ என்கிற வசனம் நடிகர் விஜய்க்கு வார்னிங் கொடுக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கே.ஜி.எஃப் 2 ரிலீசாகும் அதே தேதியில் விஜய்யின் பீஸ்ட் படமும் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், கே.ஜி.எஃப் 2 படக்குழு சீண்டும் விதமாக பாடலை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... Beast movie : அரபிக் குத்து சாதனையை கிட்ட கூட நெருங்க முடியாத ஜாலியோ ஜிம்கானா! விஜய் பாட்டுக்கு மவுசு இல்லையா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.