Ethir Neechal and Director Marimuthu Death : எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்தபோது நடிகர் மாரிமுத்து நெஞ்சுவலி குறித்து பேசிய வீடியோ காட்சி இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மாரிமுத்து. அவர் அதற்கு முன் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு வந்து படங்களை இயக்கினாலும், அதில் கிடைக்காத வெற்றியை இந்த ஒரே ஒரு சீரியல் அவருக்கு பெற்று தந்தது. கடந்த ஓராண்டில் ஆதி குணசேகரன் பற்றி சோசியல் மீடியாக்களில் போடப்படாத் மீம்ஸே இல்லை என சொல்லும் அளவுக்கு மீம் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் கொடுத்து வந்தார் மாரிமுத்து.
தற்போது புகழின் உச்சியில் இருக்கும் நிலையில், இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் நடிகர் மாரிமுத்து காலமானார். அவரின் மரணம் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆதி குணசேகரனின் மறைவுக்கு ஏராளமான பிரபலங்களும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், அவர் சீரியலில் நடித்த காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதையும் படியுங்கள்... ஏ இந்தாம்மா முதல் இந்தியன் 2 கனவு வரை.. எதிர்நீச்சல் குணசேகரனின் யாரும் அறிந்திடாத மறுபக்கம்
அந்த காட்சியில், காரில் செல்லும் போது தன் தம்பியிடம், வலி வந்து அழுத்துது, அப்பப்போ வருது, அது உடம்புல வர்ற வலியா இல்ல மனசுல வர்ற வலியானு தெரியலப்பா. அப்பப்ப வலி வந்து எனக்கு எச்சரிக்கை பண்ணுதுனு தோணுது. எதோ கெட்டது நடக்கப்போகுதுனு தோணுதுப்பா எனக்கு. அதான் நெஞ்சுவலி மாதிரி வந்து எனக்கு காட்டுது. அது மணி அடிச்சு என்ன எச்சரிக்கை பண்ணுதுடா. ஏதோ மாறி மாறி பேசுறேன்ல, எனக்கே தெரியுதுனு” அதில் பேசி இருக்கிறார்.
ஆதி குணசேகரன் கதாபாத்திரமாக அவர் எதிர்நீச்சல் சீரியலில் பேசியது தற்போது நிஜத்திலேயே அவர் மாரடைப்பு வந்து இறந்துவிட்டதால், அவர் மரணத்தை முன்பே கணித்தாரா என பலரும் இந்த வீடியோவை பார்த்து கேள்வி எழுப்பி வருகின்றனர். ரசிகர்களை கண்கலங்க வைக்கும் இந்த வீடியோ காட்சி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... 90களில் இருந்தே திரைத்துறையில் இருக்கும் எதிர்நீச்சல் மாரிமுத்து.. எத்தனை படங்கள் இயக்கி உள்ளார் தெரியுமா?