90களில் இருந்தே திரைத்துறையில் இருக்கும் எதிர்நீச்சல் மாரிமுத்து.. எத்தனை படங்கள் இயக்கி உள்ளார் தெரியுமா?

By Ramya s  |  First Published Sep 8, 2023, 11:17 AM IST

Ethir Neechal Serial Fame Marimuthu Death : மாரிமுத்து என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு எதிர்நீச்சல் குணசேகரன் என்றால் நிச்சயம் தெரியும்.


பிரபல நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் என்ற சீரியல் அவரை அதிக பிரபலமாக்கியது. ஆம். மாரிமுத்து என்றால் யார் என்று தெரியாதவர்களுக்கு எதிர்நீச்சல் குணசேகரன் என்றால் நிச்சயம் தெரியும். இந்த ஒரே சீரியல் மூலம் அந்தளவுக்கு பிரபலமானார். மீம்ஸ், வீடியோக்கள், எதிர்நீச்சல் சீரியல் சீன்கள், வசனங்கள் என சமூக வலைதளங்களை ஆக்கிரமித்திருந்தார். இந்த நிலையில் அவர் இன்று மாரடைப்பால் உயிரிழந்ததாக வெளியான தகவல் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் நடிகராவதற்கு முன்பு மாரிமுத்த பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். மேலும் ஓரிரு படங்களையும் இயக்கி உள்ளார். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம். இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வந்த பலரில் நடிகர் மாரிமுத்துவும் ஒருவர். தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து 1990-ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி சென்னைக்கு வந்தார்.

Tap to resize

Latest Videos

ஆரம்ப நாட்களில் ஹோட்டலில் வெயிட்டராக பணிபுரிந்த அவர், கவிஞர் வைரமுத்துவின் அறிமுகம் கிடைத்தது. இலக்கியங்கள் மீது ஆர்வம் இருந்ததால் வைரமுத்து உடன் நெருக்கமானார் மாரிமுத்து. பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்த மாரிமுத்து, அரண்மனை கிளி, எல்லாமே என் ராசா போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்தார்.

மாரிமுத்து மறைவால் எதிர்நீச்சல் தொடருக்கு சிக்கல்... அடுத்த ஆதி குணசேகரன் யார்?

தொடர்ந்து மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா போன்ற இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக இருந்தார். வாலி படத்தில் முதன்முறையாக எஸ்.ஜே சூர்யா உடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் சிம்புவின் மன்மதன் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய அவர், 2008-ல் பிரசன்னாவை வைத்து கண்ணும் கண்ணும் படத்தை இயக்கினார். பின்னர் 2014-ல் புலிவால் என்ற படத்தையும் அவர் இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் பெரிதளவில் வெற்றி பெறாததால் நடிப்பில் கவனம் செலுத்தினார் மாரிமுத்து.

யுத்தம் செய், நிமிர்ந்து நில், ஜீவா, கொம்பன், கொடி, பைரவா, மகளிர் மட்டும், பரியேறும் பெருமாள், சண்டக்கோழி 2, மிஸ்டர் லோக்கல், பூமி. சுல்தான், டாக்டர், விக்ரம், ஜெயிலர் என பல படங்களில் நடித்துள்ளார். ஷங்கர் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் மாரிமுத்து நடித்துள்ளார். 

click me!