
தயாரிப்பாளர் ராவீந்திரன் திடக்கழிவுகளை, ஆற்றலாக மாற்றும் திட்டத்தில் முதலீடு செய்வதாக கூறி 16 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு, மோசடி செய்து ஏமாற்றிய தொடரப்பட்ட வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, "சென்னையைச் சேர்ந்த பாலாஜி கபா என்பவர் (மாதவா மீடியா பிரைவேட் லிமிடெட்) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில், கடந்த 2020 ஆம் ஆண்டு 'லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்தைச் சேர்ந்த ரவீந்தர் சந்திரசேகர் என்பவர், தனக்கு அறிமுகமாகி, நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு 200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசை வார்த்தைகள் கூறி, மேற்படி திட்டம் ஆரம்பிப்பதற்காக போலியான ஆவணங்களை காண்பித்து, தன்னை நம்ப வைத்து ரூபாய் 16 கோடி வரை முதலீடு செய்ய வைத்து மேற்படி பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமலும் வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றி வருவதாகவும், எனவே என்னிடம் மோசடி செய்த ரவீந்தர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு, நம்பிக்கை ஆவணங்கள் மோசடி பிரிவில் (இடிஎப்) வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணையில் லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைச் செய்த ரவீந்தர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலியாவணங்களை காண்பித்து, அதனை உண்மை என நம்ப வைத்து பாலாஜி கபாவிடம் ரூபாய் 15 கோடி 83 லட்சத்து 20 ஆயிரம் பெற்றுக்கொண்டு பவர் ப்ராஜெக்ட் திட்டத்தை ஆரம்பிக்காமலும், வாங்கிய படத்தை திருப்பி கொடுக்காமலும் ஏமாற்றியது தெரிய வந்தது.
எனவே இவ்வழக்கில் தொடர்புடைய எதிரிகளை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்திப்பாய் ரத்தோர் அவர்களின் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு (பிடிஎஃப்1 ) காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர் மேனகா ஆகியோரின் தலைமையில், காவல் குழுவினர் மோசடி வழக்கில் தொடர்புடைய ரவீந்திரனை இன்று கைது செய்து, நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின் பேரில் தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திரை உலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.