நடிகை ஜெனிலியா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல் குறித்து கணவர் ரித்தேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை ஜெனிலியா 2003-ம் ஆண்டு வெளியான துஜே மேரி காசம் என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதே ஆண்டில் தமிழில் வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான அவர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றி படங்களில் ஜெனிலியா நடித்துள்ளார். தமிழில் சந்தோஷ் சுப்ரமணியம், சச்சின், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார். அதே போல் தெலுங்கு மொழியில் ஜெனிலியா நடித்த சத்யம், ஹேப்பி, ரெடி, கத உள்ளிட்ட பல படங்கள் வெற்றி படங்களாக மாறின. 2000-களின் தொடக்கத்தில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக ஜெனிலியா மாறினார். அதே போல் ஹிந்தியில் ஜானே து ஜானே நா, ஃபோர்ஸ் போன்ற ஹிந்தி படங்களில் நடித்திருந்தார்..
இதனிடையே நடிகை ஜெனிலியாவும், பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கும் கடந்த 2012-ம் ஆண்டு இல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நட்சத்திர தம்பதிக்கு ரியான், ரஹில் என்ற இரு மகன்கள் உள்ளனர். ரித்தேஷ் - ஜெனிலியா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ளனர். அவர்களுக்கு லட்சக்கணக்கண பின் தொடர்பவர்களும் உள்ளனர்.அவ்வப்போது தங்கள் குழந்தைகளின் வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
நான் ரெடி தான் வரவா... 10 ஆண்டுகளாக வெயிட் பண்ணி செல்வராகவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிய திரிஷா
இந்த நிலையில் ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில் ஜெனிலியாவின் கணவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை என்று விளக்கம் அளித்துள்ளார். மேலும் அதிக குழந்தைகளைப் பெறுவதைப் பொருட்படுத்தவில்லை என்றாலும், இந்த வதந்திகள் தவறானவை என்று அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவைர்ன் பதிவில். "இன்னும் 2-3 வைத்திருப்பதை நான் பொருட்படுத்த மாட்டேன், ஆனால் துரதிர்ஷ்டவசமாக இது பொய்யானது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே ரித்தேஷை திருமணம் செய்து கொண்ட பிறகு, பங்களில் நடிக்காதது குறித்த அவரிடம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். தன்னை படங்களில் நடிக்க வேண்டாம் என்று ரித்தேஷ் கூறவில்லை என்றும் படங்களில் படங்களில் நடிக்க வேண்டாம் என்பது தனது முடிவு என்றும் ஜெனிலியா தொடர்ந்து விளக்கம் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்திய நேர்காணலிலும், நடிகை அதையே மீண்டும் வலியுறுத்தினார், மேலும் தனது தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாக படங்களில் இருந்து விலகி இருப்பதாக தெளிவுபடுத்தினார்.
இதுகுறித்து பேசிய ஜெனிலியா " தாங்கள் சொல்ல விரும்புவதைச் மக்கள் சொல்கிறார்கள் ஆனால் உண்மை என்னவென்றால் நான் தான் முடிவு செய்தேன். இன்றுவரை... மக்கள் சொல்வது போல, என்னால் இவ்வளவு வேலை செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை, ஆனால் என் குழந்தைகளுடன் இருப்பதை நான் இன்னும் ரசிப்பதாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.