இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் யாழ்ப்பாணத்தில் யாழ் கானம் என்கிற பெயரில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது பன்முகப்படுத்தப்பட்ட இசை வெற்றிகளின் மூலம் எல்லைகளைத் தாண்டி இசை ஆர்வலர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளார். பெப்பியான பாடல்கள் முதல் தேன் சொட்டும் மெலடிகள் வரை அவரது பாடல்களின் வெற்றிப் பட்டியல் மிகப்பெரியது.
அவரது லைவ் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் ஆர்வத்துடன் ரசிக்க, தற்போது இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு கொண்டாட்டம் தரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் சந்தோஷ் நாராயணன்.
யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.
இதையும் படியுங்கள்.. எஸ்.ஜே.சூர்யா - ராகவா லாரன்ஸ் சேர்ந்து தெறிக்கவிடும்... 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் வெளியானது!
யாழ்ப்பாண மக்களுக்கு ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ்’ இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்’ பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும் இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது.
சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம்.
இதையும் படியுங்கள்.. சென்னை மக்களே.. இந்த மனுஷன போய் திட்டீட்டிங்களே! ஒரே பதிவால் இசைநிகழ்ச்சி பிரச்சனைக்கு முடிவுகட்டிய AR ரகுமான்