சென்னை மக்களே.. இந்த மனுஷன போய் திட்டீட்டிங்களே! ஒரே பதிவால் இசைநிகழ்ச்சி பிரச்சனைக்கு முடிவுகட்டிய AR ரகுமான்

By Ganesh A  |  First Published Sep 11, 2023, 12:38 PM IST

மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே வர முடியாதவர்களுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதாக அறிவித்து இருந்தார். ஆனால் அன்றைய தினம் மழை வெளுத்து வாங்கியதால், அந்த இசை நிகழ்ச்சியை செப்டம்பர் 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். செப்டம்பர் 10-ந் தேதி மழை வந்தாலும் இசை நிகழ்ச்சியை நடத்துவோம் என கூறிய ஏ.ஆர்.ரகுமான், இந்த இசை நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்களுக்கு ரெயின் கோர்ட் ஒன்றையும் வழங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அதன்படி நேற்று மாலை மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் உள்ள மைதானத்தில் ஆரம்பித்தது. இதைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி சிலருக்கு மூச்சுத் திணறலும் ஏற்பட்டது. அதுமட்டுமின்றி அந்த கூட்டத்தில் பெண்களிடம் சிலர் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுகுறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவுகளும் காட்டுத்தீ போல் பரவின.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் குளறுபடி... காசு திருப்பி தரப்படுமா? மன்னிப்புடன் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் விளக்கம்

ஒரு சிலர் கோபத்தில் அந்த நிகழ்ச்சிக்காக வாங்கிய டிக்கெட்டுகளை கிழித்தெறிந்து அதனை வீடியோவாக வெளியிட்டு, ஏ.ஆர்.ரகுமான் மீது வைத்திருந்த மரியாதையெல்லாம் போய் விட்டது என ஆவேசமாக பேசி இருந்தனர். நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் போன தங்களுக்கு நிச்சயம் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் எக்ஸ் தளம் வாயிலாக வலியுறுத்தி வந்தனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று ஏ.ஆர்.ரகுமான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுக்கு அப்புறமும் அடுத்த Concert நடக்கும் !? 🤦🏻

pic.twitter.com/hElOvxJ6uH

— Tharani ᖇᵗк (@iam_Tharani)

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், அன்புள்ள சென்னை மக்களே, டிக்கெட் வாங்கிவிட்டு, சில தவிர்க்க முடியாத காரணத்தால் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாதவர்கள், தாங்கள் வாங்கிய டிக்கெட் காப்பியை arr4chennai@btos.in என்கிற மெயிலுக்கு அனுப்புங்கள். எங்கள் குழு உங்களுக்கு விரைவாக உதவுவார்கள் என குறிப்பிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் சூப்பர் தலைவா என ஏ.ஆர்.ரகுமானை பாராட்டி வருகின்றனர். 

Dearest Chennai Makkale, those of you who purchased tickets and weren’t able to enter owing to unfortunate circumstances, please do share a copy of your ticket purchase to arr4chennai@btos.in along with your grievances. Our team will respond asap🙏

— A.R.Rahman (@arrahman)

இதையும் படியுங்கள்... ஆள விடுங்கடா சாமி... ஏ.ஆர்.ரகுமான் கச்சேரிக்கு வந்து தலைதெறிக்க ஓடிய ரசிகர்கள் - காசெல்லாம் வேஸ்ட் என குமுறல்

click me!