
ரஜினியை எவ்வளவோ பெரிய ஜர்னலிஸ்டுகள் பேட்டி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மிகப் பெருமையாக நினைப்பது தனது குருநாதர் கே.பாலசந்தர் தன்னை ஒரு விழாவில் பேட்டி எடுத்ததுதான். 2011-ல் நடந்த விழாவில் எடுக்கப்பட்டது.
அதன் ஹைலைட்ஸ்:
பாலசந்தர்: நீ மறுபடியும் சிவாஜிராவ் ஆக முடியுமா?
ரஜினி : நான் சிவாஜிராவா இப்பவும் இருக்கப்போதான், ரஜினிகாந்தா இருக்கேன்.
பாலசந்தர்: சூப்பர் ஸ்டாராக இருக்கும் நீ அதற்கு கொடுக்கும் விலை என்ன?
ரஜினி : இப்படி இருக்குறதுல எனக்கு வருத்தம் உண்டு. என்னோட நிம்மதி, சந்தோஷத்தை நான் ரொம்ப பலி கொடுத்துட்டு இருக்கேன்.
பாலசந்தர்: உனக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்த தமிழ் சினிமாவுக்கு என்ன பண்ணுவ?
ரஜினி: தமிழர்கள், தமிழ் சினிமா பெருமை படுற அளவுக்கு ஏதாவது பண்ணுவேன்.
பாலசந்தர்: நீ பண்ணாம விட்டுட்டு, வருத்தப்பட்ட படங்கள்.
ரஜினி: நிச்சயமா ஒண்ணு ரெண்டு இருக்குது. ஆனா அதன் பெயரை சொல்ல விரும்பல.
பாலசந்தர்: அமிதாபச்சன் செய்த ‘சீனிகம்’ மாதிரி நீ ஏன் படம் பண்றதில்லை?
ரஜினி: நான் எப்பவும் நடிகனான என்னுடைய சந்தோஷத்துக்கு படம் பண்ண விரும்புறதில்லை. கமர்ஷியலாதான் பண்ன விரும்புறேன்.
பாலசந்தர்: எப்போ நீ தேசிய விருது வாங்கப்போற? நீ அந்த விருதை இன்னும் வாங்கலையேன்னு எனக்கு வருத்தமா இருக்குது.
ரஜினி : எனக்கும் அந்த ஆசை இருக்குது. ஆனா அப்படியொரு விருதை என்னை வாங்க வைக்கிறது உங்களை மாதிரி இயக்குநர்கள் கையிலதான் இருக்குது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.