தன் படத்துக்காக ரசிகனை பலிகடாவாக்குவார் ரஜினி: சூப்பர் ஸ்டார் பற்றிய சுருக் விமர்சனம்... #HBDSuperStarRajinikanth #Rajinikanth #RajinikanthBirthday

 
Published : Dec 12, 2017, 09:00 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
தன் படத்துக்காக ரசிகனை பலிகடாவாக்குவார் ரஜினி: சூப்பர் ஸ்டார் பற்றிய சுருக் விமர்சனம்... #HBDSuperStarRajinikanth #Rajinikanth #RajinikanthBirthday

சுருக்கம்

special comments about Rajinikanth

சூப்பர் ஸ்டார்! டான் ஆப் இந்தியன் சினிமா! வசூல் மன்னன்!...என்று மிகப்பெரிய புகழை சம்பாதித்து வைத்திருந்தாலும் கூட விமர்சனத்தையும் ஏகத்துக்கும் சம்பாதித்தவர் ரஜினி. 
அதில் சில...(அன்றிலிருந்து இன்று வரை)

*    திரைக்கதையின் ஆரோக்கியத்துக்காக கூட கமர்ஷியலை கடந்து யதார்த்த காட்சிகளில் நடிக்க மாட்டார்.

*    கோபத்திலிருந்தால் உதவி இயக்குநர்களை அடிக்க கூட தயங்க மாட்டார்.

*    தனது டைம் முடிந்துவிட்டால் சட்டென்று மேக் அப்பை கலைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். இயக்குநரின் ஒப்புதலை கேட்பதோ, மறுநாள் சீன்ஸ் பற்றி தெரிந்து கொள்வதோ கூட கிடையாது.

*    சம்பள விஷயத்தில் கறார் என்று சொல்லாவிட்டாலும் தெளிவாக இருந்து செட்டில் பண்ண வைத்துவிடுவார்.

*    அதீத உரிமை எடுக்கும் ரசிகனை பொது இடத்தில் அடிக்கவும் யோசிக்க மாட்டார்.

*    அரசியலுக்கு வருவதாக சொல்லியே பல காலமாய் ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார்.

*     புதிய படம் ரிலீஸாகையில் மட்டும் ரசிகனை நோக்கி குரல் கொடுப்பார்! அதை ஓட வைப்பதற்காக.

*    கமர்ஷியல் படம் மட்டுமே இலக்கு! எனும் வறட்டு சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ‘ஐயா, பாபநாசம்’ போன்ற அருமையான கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்தவர்.

*    தான் சொன்னால் கேட்பார்கள் என்பதற்காக தனக்கு தோதான அரசியல் சூழ்நிலைக்கு  ரசிகனும் உட்பட மறைமுகமாய் பிரஷர் கொடுப்பார்.

*    2.0, காலா இரண்டும் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கமர்ஷியல் எண்ணத்திலேயே இப்போதெல்லாம் அடிக்கடி அரசியல் பேசுகிறார்.

*    தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் செய்த அரசியல் வழி நியாயத்தில் 10%தை கூட ரஜினி செய்யவில்லை.

*    தமிழ், தமிழ் என்று சொன்னாலும் கூட தனது முதலீட்டை அவர் கொட்டுவது முழுக்க முழுக்க கர்நாடகாவில்தான்.

*    கண்மூடித்தனமான இந்துயிஸ ஆதரவில் இருக்கிறார்.

*    தனது மகள்களின் திருமணத்துக்காக தான் சொன்னது போல் ரசிகர்களுக்கு ஒரு வாய் சோறு போடாதவர், தமிழகத்துக்கு என்னசெய்துவிட போகிறார்!?
.................. எனும் விமர்சனங்கள் அடிக்கடி எழுந்தன. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்!