சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்…. காலா படத்தின் 2 ஆவது லுக் போஸ்டரை வெளியிட்டார் தனுஷ் !!!

 
Published : Dec 12, 2017, 08:30 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாள் ஸ்பெஷல்…. காலா படத்தின் 2 ஆவது லுக் போஸ்டரை வெளியிட்டார் தனுஷ் !!!

சுருக்கம்

kala film 2nd look published by dhanush

சூப்பர் ஸ்டார் ரஜினி இன்று தனது  பிறந்த நாளை  சிறப்பாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக காலா படத்தின் இரண்டாவது லுக் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார்.

இயக்குநர் ரஞ்சித் இயக்கிய கபாலி  திரைப்படம் பெரு வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த்தின் மருமகன் தனுஷின்  பட நிறுவனமான  வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில், மீண்டும் ரஞ்சித்  இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து உருவாகி வரும் திரைப்படம் ‘காலா.

மும்பையைப் பின்னணியாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வயதான தோற்றத்தில், தாதா போன்று காட்சியளிக்கும் அந்தப் போஸ்டரில் கரிகாலன் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், தமிழர் ஒருவரின் நிஜக்கதையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கலாம் என தகவல் பரவியது.

இந்நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி படத்தின் இரண்டாவது போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் வெளியிட்டார்.

இதே போன்று ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு காலா படத்தின் செகன்ட் லுக் போஸ்டரை தனுஷ்ம்  தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இது இந்திய அளவில் வைரலாகி வருகிறது.

 

 

 



 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!
கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்