
நடிகர்களாக இருந்து அரசியலில் சாதித்தவர்கள் பலர்... இதற்கு மிகப் பெரிய உதாரணம் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும். தற்போது கூட ரஜினி, கமல், விஷால் என பலர் அரசியலுக்கு வருவார்கள் என்கிற மிகபெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.
ரஜினி, கமலை அரசியலில் ஆர்.கே.நகர் இடைதேர்தல் மூலம் மிஞ்ச நினைத்த விஷாலுக்கு, தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை தள்ளுபடி செய்து விஷாலின் கனவை கலைத்துவிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அரசியல் குறித்து ஒரு சில காரசாரமான கருத்துக்களை முன்வைத்து வரும் காமெடி நடிகர் மயில்சாமி அரசியல் கட்சி ஆரம்பித்தது போல் ஒரு போஸ்டர் சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது .
இந்த போஸ்டரில், தே.ப .பா.க என்று அரசியல் கட்சியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தேசிய பணக்காரர்கள் பாதுகாப்புக் கழகம் என்பது விரிவாக்கமாம். இப்படிப் பரவி வரும் போஸ்டரால் பலர் மயில்சாமி தனிக் கட்சி ஆரம்பித்தாரா? அல்லது திரைப் படத்தின் போஸ்டரா என குழம்பி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் விரைவில் இது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த போஸ்டர் இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.