ஒரேயொரு டயலாக்கிற்காக வடிவேலுவை வெறுத்த ரஜினி! கர்நாடகத்திலோ அவரது நண்பர் ராஜ்பகதூர்... தமிழ்நாட்டில் யார்?

 
Published : Dec 12, 2017, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 01:40 AM IST
ஒரேயொரு டயலாக்கிற்காக வடிவேலுவை வெறுத்த ரஜினி! கர்நாடகத்திலோ அவரது நண்பர் ராஜ்பகதூர்... தமிழ்நாட்டில் யார்?

சுருக்கம்

Superstar Rajinikanth Turns 67 Special Article 1

ரஜினியை வர்ணிச்சு உலகமே பேசலாம்! ஆனா ரஜினி தன்னைப் பற்றி என்ன நினைக்கிறார்? எதை விரும்புறார்? எதை வெறுக்கிறார்...இந்த மாதிரியான பர்ஷனல் விஷயங்கள், நிகழ்வுகளின் கலவை இதோ...

*    ரஜினிக்கு பிடித்த தெய்வங்கள் நிறைய இருந்தாலும் அவர் ஆத்மார்த்தமா வணங்குறது...ஒரு காலத்துல ராகவேந்திரர் அதற்குப் பிறகு பாபா.

*    ஒரு காலத்தில் ரஜினிக்கு பிடித்த உணவு...சிக்கனில் செய்யப்பட்ட எல்லாமே! ஆனா வயோதிகம், டாக்டர்ஸ் அட்வைஸ் காரணமா  இப்போ அவர் விரும்பி அதிகம் சாப்பிடுறது வேகவைத்த காய்கறிகள்! பாலிஷ் செய்யாத அரிசியில் செய்த கொஞ்சம் சாதம், அடிக்கடி சப்பாத்தி.

*    பிடித்த காமெடியன் எப்பவும் நாகேஷ், அப்புறமா வடிவேலு.

*    ’எனக்கு தினமும் ராத்திரியில தூங்குறதுக்கு பாட்டிலும் வேணும், பொண்ணும் வேணும்.’ என்று திருமணத்துக்கு முன் ஒரு கடுப்பான சூழலில் வெளிப்படையாய் சொன்னார் 

*    ரஜினிக்கு பிடித்த சினிமா பாட்டு, கர்ணன் படத்தில் வரும் ‘உள்ளத்தில் நல்ல  உள்ளம்’ பாடல்தான். 

*    தனது பர்ஷனல் பற்றி தவறாக ஆயிரம் செய்தி வந்தாலும் கவலையே படாதவர் ரஜினி. ஆனால் தனது மூத்த மகள் ஊனம்! ரஜினியின் இரண்டு மகள்களும் ஊனம்! என்று கிளம்பிய தகவல்கள்தான் தன்னை அதிகம் பாதித்த விஷயமென்பார்.

*    எப்போதாவது நட்சத்திர ஹோட்டல்களுக்கு குடும்பத்துடன் சாப்பிட போவார். அப்போது, மெனுவை தன் கையால் எடுத்து மகள்களின் தட்டி பரிமாறுவது அவருக்கு விருப்பமான சென்டிமெண்ட்.

*    மனைவி லதாவை ‘ஜில்லு’ என்றுதான் செல்லமாய்  அழைப்பார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தால் உயர்தர உணவுகளை டைரக்டரோ அல்லது தயாரிப்பாளரோ கூட அவருக்கு பரிமாற காத்திருப்பார்கள். ஆனால் வீட்டில் தனது மனைவி லதா சமைக்கும் போது கிச்சனில் தட்டை எடுத்துக் கொண்டு காத்து நிற்பதே தனக்கு சந்தோஷம் என்பார்.

*    மக்கள் பிரச்னைகளில் ரஜினிக்கு அதிக கவலை உண்டு. சாமான்யன் எப்படி வாழ்கிறான், என்னென்ன அவஸ்தை படுகிறான் என்றரிய அடிக்கடி மாறுவேடத்தில் ஊர் சுற்றுவார்.

தமிழ்நாட்டில் அப்படி ஊர் சுற்றையில் அவருடைய கம்பெனியாய் இருந்தவர் மறைந்த இயக்குநர், நடிகர் மணிவண்ணன். கர்நாடகத்திலோ அவரது நண்பர் ராஜ்பகதூர்.

*    ரஜினி சர்ப்பரைஸாய் செல்லும் நண்பர் வீடுகளில் கமலின் வீடு கட்டாயம் உண்டு. 

*    வெளியாட்களின் தொந்தரவு பிடிக்காது. ஆனால் ஒரு முறை சென்னையில் ஒரு வி.ஐ.பி. நண்பரின் வீட்டுக்கு ரஜினி சென்றிருந்தார். இவர் வந்திருப்பதை அறிந்து பக்கத்து வீட்டின் குழந்தைகள் எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தன. இதை உள்ளிருந்து கவனித்துவிட்ட ரஜினி,  கிளம்புகையில் சட்டென பக்கத்து வீட்டுக்கே சென்று அந்த குழந்தைகளுக்கு ஸ்வீட் ஷாக் கொடுத்தார்.

*    ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கையில் பிடித்த விஷயம் மேக் அப் இல்லாமல் இருப்பது. 

*    கொஞ்ச நேரம் லஞ்ச் பிரேக் முடித்துவிட்டு சட்டென்று ஸ்பாட்டுக்கு வருபவர், தனது சீன் துவங்கும் வரை அங்கேயே உட்கார்ந்து கவனிப்பார், சக ஆர்டிஸ்டுகளுடன் அரட்டையடிப்பார்.

*    தான் வைகைப்புயல் வடிவேலுவின் விசிறி என்பதை வெளிப்படையாக சொன்னவர். ஆனால் ராணா படம் பற்றி ’ராணாவாவது, கானாவாவது!’ என்று சொன்ன ஒற்றை டயலாக்கிற்காக வடிவேலை அடியோடு வெறுத்து, ஒதுக்கிவிட்டார்.

*    சந்திரமுகி ஷூட்டிங்கின் போது செட்டிலிருந்து லாட்ஜூக்கு பல முறை பி.வாசு மற்றும் பிரபுவுடன் தலையில் ஒரு தொப்பியை மாட்டியபடி நடந்தே திரும்புவார்.

*    ஒரு காலத்தில் வீட்டை தேடி வந்து உதவி கேட்பவர்களுக்கு நிறைய பண  உதவி செய்திருக்கிறார். இதை பலர் தப்பாக பயன்படுத்தியதால், மருத்துவ உதவி வேண்டுமென்றால் அதற்கென சில பெரிய மருத்துவமனைகளுடன் டை அப் வைத்துக் கொண்டு தன்னை தேடி வருபவர்களை அங்கே அனுப்பிவிடுவார். நேரடியாக கையில் பணம் கொடுக்கும் வேலையே கிடையாது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கொங்குநாட்டை அதிரவிட்ட விஜய்... ஈரோட்டில் தளபதி எடுத்த மாஸ் செல்பி வீடியோ வைரல்
தன்னோட வாழ்க்கைக்கே வழிய காணோம்; இதுல தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணும் தங்கமயில்!