
“பியூட்டி” என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படமாக்கப்பட்டுள்ளது இந்த படம். சென்னையிலும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள பூந்தோட்டங்களில் மட்டுமல்லாமல் அங்குள்ள இரயில்வே நிலையம், விதம்விதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.
தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே ‘சைக்கலாஜிகல் லவ் த்ரில்’லராக, கார் – பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பான திரைக்கதையுடன் “பியூட்டி”யை படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இயக்குநர் கோ.ஆனந்த சிவா...
Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!
இந்த படத்தில் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார் கரீனா ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர். “பியூட்டி” படத்தை ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவு செய்து, தயாரித்துள்ளார். இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களை இப்படத்திற்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இந்த படம் குறித்த டீசர், ட்ரைலர் வெளியீடு மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.