
கன்னடா மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவரை எக்ஷ்பிரஷன் குயீன் என்று அழைப்பது வழக்கம். கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், பீஷ்மா, சரிலேரு நீக்கெவுரு, புஷ்பா, சீதா ராமம் என்று மாஸ் படங்களில் நடித்துள்ளார். தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார். விரைவில், இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் ராஷ்மிகா மந்தனா கலந்து கொள்ள உள்ள இருக்கிறார். இதற்கிடையில் மும்பையில் நடந்து வரும் அனிமல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இன்னும் 15 முதல் 20 நாட்கள் எஞ்சியுள்ள நிலையில் அதனை முடித்துக் கொடுக்க மும்பை சென்றுள்ளார்.
கமல் படத்தில் உதயநிதிக்குப் பதில் யார் நடிக்கிறார் தெரியுமா?
இயக்குநர் சந்தீப் வெட்டி ரெங்கா இயக்கத்தில் பாலிவுட் ஸ்டார் ரன்பீர் கபூர் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். அப்படி நடித்து கொண்டிருக்கும் போதே சென்னையில் நடக்கும் வாரிசு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருக்கிறாராம். இதற்கிடையில் மிஷன் மஞ்சு படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இப்படி அடுத்தடுத்து பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகையாக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் ஹங்காமா ரவுண்ட் டேபிள் 2022: விதவிதமாய், வித்தியாசமாய் உடையணிந்து வந்து கவர்ந்த பிரபலங்கள்!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.