அஜித் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு... பொக்கிஷமாக பாதுகாப்பேன் என மாஸ்டர் பட நடிகர் உருக்கம்

By Ganesh A  |  First Published Dec 20, 2022, 2:49 PM IST

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு படத்தில் அஜித்துடன் நடித்து இருக்கிறார்.


மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யிடம் படிக்கும் மாணவனாக நடித்திருந்தவர் சிபி சந்திரன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிபி, பிக்பாஸ் கொடுத்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பாதியிலேயே வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சிபிக்கு சினிமாவில் அடுத்தடுத்து வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில், தற்போது இவர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி உள்ள துணிவு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் சிபி, அஜித்தின் டீம்மேட் ஆக நடித்துள்ளார். இப்படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக உள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... அட்லீயின் முதல் வாரிசு... பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆஜரான விஜய் - வைரலாகும் போட்டோஸ்

இந்நிலையில், நடிகர் சிபி சந்திரனுக்கு அஜித் பரிசு ஒன்றை கொடுத்துள்ளார். அதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ள சிபி, அந்த பரிசை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். சிபியின் இந்த பதிவுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

அதன்படி துணிவு படத்தில் இடம்பெறும் கசேதான் கடவுளடா பாடல் ஷூட்டிங்கின் போது அஜித், சிபிக்கு கண்ணாடி ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். அதை அணித்தவாரு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இது விலைமதிப்பில்லாத பரிசு என்றும் இதனை பொக்கிஷமாக பாதுகாப்பேன் என்று சிபி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... என்னை பலமுறை அழ வைத்த பாடல் இது... soul of varisu பாடல் குறித்து இசையமைப்பாளர் தமன் உருக்கம்

click me!