பிரபல மலையாள காமெடி நடிகர் உல்லாஸ் பந்தலம் மனைவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாள திரையுலகில் இளம் காமெடி நடிகர்களில் ஒருவனான உல்லாஸ் பந்தலம் மனைவி ஆயிஷாவை காணவில்லை என, நடிகர் உல்லாஸ் பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு உற்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், முதல் கட்டமாக அவருடைய வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய போது, ஆயிஷா தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
38 வயதே ஆகும் ஆயிஷா என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார், அவரை யாரேனும் தற்கொலைக்கு தூண்டினார்களா? என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். மேலும் நடிகர் உல்லாஸ் பந்தலத்திடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவரிடம் நடத்திய விசாரணையின் படி, உல்லாஸ் வீட்டில் இருந்தபோது தான் ஆயிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல் துறை அறிக்கை கூறுகின்றன.
ஆயிஷா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கூட தன்னுடைய வீட்டின் முதல் தளத்தில் தூங்கியதாக கூறப்படுகிறது. வீட்டில் கூட மனைவியா தேடி பார்க்காமல், நடிகர் உல்லாஸ் மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் அவர் மீதும் போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது மலையாள திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடி நடிகர் உல்லாஸ் பந்தளம் மம்முட்டி நடித்த ‘தெய்வத்தின் ஸ்வந்தம் கிளீடஸ்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர். இவரது எதார்த்தமான காமெடிய ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிலையில், தற்போது பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் இவருடைய மனைவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், இதன் முடிவு வந்த பிறகே இவருடைய இறப்பிற்கான உண்மை தெரியவரும் என கூறப்படுகிறது.