நடிகர் விஜய் நடித்துள்ள 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள மூன்றாவது சிங்கிள் பாடல், இன்று 5 மணிக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் திரையுலகின் டாப் ஸ்டார் நாயகனான, தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'வாரிசு' திரைப்படம், இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாவதற்கு இன்னும் ஒரே மாதமே உள்ள நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளில் படு தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இந்த மாதம் 24 ஆம் தேதி, 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா... சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் என கூறப்படுகிறது.
அதற்க்கு முன்னனாக இந்த படத்தின் டீசர் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'வாரிசு' படத்தில் இடம்பெற்றுள்ள, முதல் சிங்கிள் பாடலான ரஞ்சிதமே, மற்றும் இரண்டாவது சிங்கிள் பாடலான தீ தளபதி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை தொடர்ந்து, தற்போது மூன்றாவது சிங்கிள் பாடலான 'Solul of varisu' இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பாடல் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒருபக்கம் வெறித்தனமாக கார்த்திருக்கின்றனர். இவர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் வகையில், இந்த பாடலின் புரோமோவை தற்போது படக்குழு வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த பாடலை சின்னக்குயில் சித்ரா... தன்னுடைய கானக்குரலால் பாடியுள்ளார். தமன் இசையில், மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த பாடல் இன்று வெளியாக உள்ளது. முழுக்க முழுக்க குடும்ப செடிமென்ட்டை மையமாக வைத்து, ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த படத்தில் , விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, சங்கீதா, ஸ்ரீகாந்த், ஷியாம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து இந்த படத்தை நேர்த்தியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் இயக்கியுள்ளார் இயக்குனர் வம்சி. இப்படத்தை, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.