இந்தியன் 2 படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த், இப்படம் வரலாறு படைக்கும் என கூறி இருக்கிறார்.
இந்தியன் 2 திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்திருக்கிறார். மேலும் சித்தார்த், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் வருகிற ஜூலை 12ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சித்தார்த் பேசியதாவது : “இயக்குனர் ஷங்கர் சார் 21 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். தற்போது மீண்டும் என்மீது நம்பிக்கை வைத்து இந்தியன் 2 படத்தில் அதுவும் கமல்ஹாசன் உடன் நடிக்க வாய்ப்பளித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி. இந்தியன் என்னுடைய பேவரைட் படம். எனக்கு கமல்ஹாசன் ஆக வேண்டும் என்பது தான் ஆசை.
இதையும் படியுங்கள்... சொந்த தாய்மாமா பொண்ணு... இராணுவத்துல வேலை பாக்குறாங்க - மனைவி பற்றிய ஆச்சர்ய தகவலை வெளியிட்ட சிங்கம்புலி
நான் ஷங்கர் சாரின் புராடக்ட், கமல் சாரின் மாணவன். இன்றைய காலகட்டத்திற்கு நாம் அனைவருக்கும் இப்படம் முக்கியமானது. குறிச்சி வச்சிக்கோங்க, தாத்தா வராரு கதறவிட போறாரு. இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும் என உறுதிபடக் கூறி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து பேசிய அனிருத், இந்த படத்திற்காக அனைவரும் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பதை நான் பார்த்திருக்கிறேன். தியேட்டரில் படம் பார்க்கும் போது உங்களுக்கும் அது தெரியும். இந்தியன் 2 நிச்சயம் சம்பவம் செய்யும் என தெரிவித்துள்ளார்.
மேலும் இயக்குனர் ஷங்கர் பேசியதாவது : “இன்றைய காலகட்டத்தில் இந்தியன் தாத்தா இருந்தால் என்னென்ன செய்வார் என்பதை வைத்து தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். இதன் முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தது. இரண்டாம் பாகம் எல்லைகளை கடந்து உருவாகி உள்ளது. இந்தியன் முதல் பாகத்தில் நடிக்கும் போது 20 நாட்கள் prosthetics மேக்கப் போட்டு நடித்தார் கமல். ஆனால் தற்போது இந்த படத்துக்காக 70 நாட்கள் அந்த மேக்கப் போட்டு நடித்திருக்கிறார். கமலை ஒரு நடிகனாக இப்படத்தில் அதிகம் பார்ப்பீர்கள் என ஷங்கர் கூறினார்.
இதையும் படியுங்கள்... Emergency : விஜய்யின் கோட் படத்தை பதம் பார்க்க வருகிறது கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி - ரிலீஸ் தேதி அறிவிப்பு