ஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...

Published : Oct 16, 2019, 10:49 AM IST
ஒரு மாதகாலமாக பிரசாத் ஸ்டுடியோ பக்கமே எட்டிப்பார்க்காத இளையராஜா...

சுருக்கம்

அதைத் தொடர்ந்து அது ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விரைவில் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இசையமைப்பாளர் அனிருத்தை அங்கு குடியேற்றுவதற்காகவே பிரசாத் நிர்வாகத்தினர் அவருக்கு திட்டமிட்டே தொந்தரவு அளித்ததாக பகீர் தகவல்கள் வெளிவருகின்றன.   

சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக பிரசாத் ஸ்டுடியோவை ஒரு இசைக்கோவிலாகவே மாற்றி பணியாற்றி வந்த இசைஞானி இளையாராஜா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அந்த ஸ்டுடியோவுக்குள் காலடி எடுத்து வைப்பதையே நிறுத்தி விட்டார். இனி அங்கு அவரது இசைப்பணி தொடருவது சந்தேகமே என்கின்றனர் ஸ்டுடியோ வட்டாரத்தினர்.

தனது இசைப்பணிகளுக்கு இடையூறு செய்வதாக பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகி மீது தனது மேலாளர் கஃபாரை வைத்து போலீஸில் புகார் செய்திருந்தார் இளையராஜா. அதைத் தொடர்ந்து அது ஒரு வழக்காகப் பதிவு செய்யப்பட்டு விரைவில் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. இந்நிலையில் ராஜாவை அங்கிருந்து வெளியேற்றிவிட்டு இசையமைப்பாளர் அனிருத்தை அங்கு குடியேற்றுவதற்காகவே பிரசாத் நிர்வாகத்தினர் அவருக்கு திட்டமிட்டே தொந்தரவு அளித்ததாக பகீர் தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்து அனிருத் தரப்பை தொடர்புகொண்டால் அவர்கள் பதில் தர மறுக்கின்றனர்.

20 வருடங்களாக தொடர்ந்து வரும் ராஜாவிடம் வாங்குவதை விட வருகிற புதியவரிடம் பல மடங்கு வாடகை வாங்க முடியும் என்கிற ஒரு அல்ப காரணத்துக்காகவே ராஜா வெளியேற்றப்படுகிறார் என்ற செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் கோடிக்கணக்கான ராஜா ரசிகர்களின் சாபத்திலிருந்து பிரசாத் நிர்வாகம் தப்பவே முடியாது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Demonte Colony 3: பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் அருள்நிதி! 50 கோடியில் சாதனை படைத்த டிமாண்டி காலனி 3!
Vijay Movie: எந்த தடையும் போடமுடியாது.! விஜய் படம் பொங்கலுக்கு ரிலீஸ்.! தெறிக்கவிடப்போகும் தளபதி ரசிகர்கள்.!