
‘நோ ப்ரா’ தினத்தன்று மேலாடையின்றி போஸ் கொடுத்த பிரபல பாடகியும் கொரியன் நடிகையுமான சோய் ஜின் ரி என்கிற சுல்லி நேற்று முன் தினம் இரவு தனது அபார்ட்மெண்ட்ஸில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
குழந்தை நட்சத்திரமாக படங்களில் அறிமுகமாகி பிரபல பேண்ட் இசைக்குழுவின் மூலம் பாடகியாகப் புகழ்பெற்றவர் சுல்லி. பாடகி, நடிகை என்பதை தாண்டி சர்ச்சைக்குரிய கருத்துகள் மற்றும் பதிவுகள் மூலம் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பிரபலமான நபராக சுல்லி திகழ்ந்து வந்தார். அதிலும் குறிப்பாக இவரது ‘நோ பிரா’புரட்சியின் காரணமாக இவரை இன்ஸ்டாகிராமில் சுமார் 50 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.
கடந்த 2016-ம் ஆண்டு முதல் முறையாக சுல்லி, மேலாடையின்றி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதன் மூலம் அவர் சமூக ஊடகத்தில் மிகக்கடுமையான விமர்சனத்துக்கும், கண்டனங்களுக்கும் உள்ளானார். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத அவர், பலமுறை இன்ஸ்டாகிராம் நேரலையில் மேலாடையின்றி தோன்றி அதிரவைத்து வந்தார். இதனால் அவர் தொடர்ந்து பழமைவாதிகளின் எதிர்ப்பை சம்பாதித்து வந்தார்.
இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள தனது வீட்டில் நேற்று முன்தினம் சுல்லி பிணமாக கிடந்தார். அவரது மேலாளர் அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று, அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மர்ம சாவு குறித்து விசாரித்து வரும் போலீசார், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிவைத்துள்ள குறிப்புகளின் மீது விசாரணை நடைபெற்று வருவதால் அதை போலீஸார் இதுவரை பகிரங்கமாக வெளியிடவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.