விஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...!! பஞ்சாயத்து ஆரம்பம்...!!

Published : Oct 15, 2019, 07:06 PM ISTUpdated : Oct 15, 2019, 07:08 PM IST
விஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...!!  பஞ்சாயத்து ஆரம்பம்...!!

சுருக்கம்

*இதுவும் தளபதி பற்றிய சேதிதான். விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அதன் சேட்டிலைட்ஸ் உரிமையை ஒரு முன்னணி சேனல் முப்பத்தைந்து கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்று தகவல். ஏனோ பிகில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரத்தை முடித்துவிட துடிக்கிறார்களாம்.  (அப்ப பிகில் பத்தி தளபதிக்கே டவுட்டா?)

*பிகில் படம் ரிலீஸுக்கு தயார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தின் ஷூட்டிங் தயாராகி போய்க் கொண்டிருக்கிறது. இதில் விஜய்சேதுபதியும் இணைந்திருப்பதால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிக் கிடக்கிறது. இந்த நிலையில் பிகில் படம் தமிழகத்தின் முக்கால்வாசி தியேட்டர்களை பிடித்துக் கொண்டுவிட்டதால், போதிய தியேட்டர்கள் கிடைக்காமல் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 


*இதுவும் தளபதி பற்றிய சேதிதான். விஜய், விஜய்சேதுபதி நடிக்கும் ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு துவங்கி ஒரு வாரம்தான் ஆகிறது. ஆனால் அதற்குள் அதன் சேட்டிலைட்ஸ் உரிமையை ஒரு முன்னணி சேனல் முப்பத்தைந்து கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது என்று தகவல். ஏனோ பிகில் ரிலீஸுக்கு முன்பே இப்படத்தின் வியாபாரத்தை முடித்துவிட துடிக்கிறார்களாம். 
(அப்ப பிகில் பத்தி தளபதிக்கே டவுட்டா?)

*அஜித்தை வைத்து இரண்டாவது படத்தை தயாரித்துக் கொண்டிருக்கும் இறந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர், சென்னையில் சொந்தமாக ஒரு அலுவலகத்தை வாங்கி செமத்தியாக இன்டீரியர் பண்ணி தெறிக்க விட்டிருக்கிறாராம். அவரது அடுத்த எய்ம், ரஜினியை வைத்து படம் பண்ணியே தீருவது என்பதுதான். 

*விஜய்சேதுபதி சமீபத்தில் பெரிதாய் எந்த ஹிட்டையும் கொடுத்துவிடவில்லை. ஆனாலும் அவருக்கு படங்கள் மட்டும் புக் ஆகி தள்ளுகின்றன. அந்த வரிசையில் இப்போது ’இம்சை அரசன்’ பட இயக்குநர் சிம்புதேவன், விஜய்சேதுபதியை அணுகினாராம், அவரும் ஓ.கே. சொல்லிவிட்டாராம். 

*’ஈஸி கோயிங் ஹீரோயின்’ என்று பெயரெடுத்தவர் நயன் தாரா. இயக்குநர் முதல் லைட் பாய் வரை எல்லோரிடமும் மரியாதையாக, அன்பாக பழகக்கூடியவர். ஆனால் கடந்த சில காலமாக அவர் டெக்னீஸியன்களை கண்டு கொள்வதில்லை, யாரையும் பெரிதாய் மதிப்பதுமில்லை, கோபப்பட்டால் கண்ட்ரோல் இல்லாமல் திட்டிவிடுகிறார்! என்றெல்லாம் பெயரெடுத்துக் கொண்டிருக்கிறார் 
(என்னாச்சு நயனுக்கு?)
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜன நாயகன் படக்குழுவினருக்கு மலேசியா போலீஸ் ஸ்ட்ரிக்ட் வார்னிங்: எதுக்கு? ஏன்? பரபரக்கும் பின்னணி!
திறப்பு விழாவிற்கு போகாதீங்க; ரேணுகாவை எச்சரிக்கும் ஞானம் - எதிர்நீச்சல் தொடர்கிறது டுவிஸ்ட்!