
நடிகர் கஞ்சா கருப்பு மதுரையில் இருந்து வந்து பல ஆண்டுகள் சென்னையில் கஷ்டப்பட்டு இயக்குனர் பாலா மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் திரைத்துறையில் அறிமுகமானதிலிருந்தே இவருக்கு வெற்றி முகம் தான் கிட்டியது என்றால் அது மிகையல்ல. இவர் நடிப்பில் வெளியான பிதாமகன், ராம், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, சிவப்பதிகாரம் மற்றும் பருத்தி வீரன் என்று தொடர்ச்சியாக பல படங்கள் ஹிட்டாக துவங்கியது.
இவர் நடிக்க துவங்கிய வெறும் பத்தே ஆண்டுகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மிகப்பெரிய காமெடி நடிகராக உருவெடுத்தார். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 2014 ஆம் ஆண்டு அவர் திரை உலகில் உச்ச நட்சத்திரமாக இருந்த நேரத்தில் மகேஷ் மற்றும் ரகசியா நடிப்பில் உருவான "வேல்முருகன் போர்வெல்ஸ்" என்கின்ற திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டார்.
நேற்று ஏவிக்க்ஷன்னு ஷாக் கொடுத்துட்டு... இன்று சர்பிரைசாக இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்!
இதற்காக ஒரு போர்வெல் லாரியை சொந்தமாக வாங்கிய கஞ்சா கருப்பிற்கு மிஞ்சியது தோல்வி மட்டுமே. 10 ஆண்டுகளில் அவர் சினிமா துறையில் சேர்த்த மொத்த பணத்தையும் இந்த ஒரே படத்தின் மூலம் இழந்து தற்போது சொந்த வீட்டை விற்றுவிட்டு மாத வாடகைக்கு சென்னையில் வீடு எடுத்து தங்கி உள்ளார் கஞ்சா கருப்பு.
தற்பொழுது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ள கஞ்சா கருப்பு அண்மையில் ஒரு பேட்டியில் பேசும் பொழுது "பாலா சார் என்னை ஒரு முறை மேடையிலேயே எச்சரித்து இருந்தார், உனக்கு தயாரிப்பு பற்றி என்ன தெரியும்? எதற்காக நீ தயாரித்து இவ்வளவு பணத்தை இழந்தாய், நீ ஒரு நல்ல நடிகன், அந்த பாதையில் செல் என்று எனக்கு பாலா அறிவுரை கூறியதை நான் கேட்கவில்லை. அதை கேட்டு நான் மனமாற்றம் அடைவதற்கு முன்பு எனக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
களைகட்டிய பிரபு மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாவது திருமணம்! நேரில் வந்து வாழ்த்திய ‘லெஜண்ட்’ சரவணன்!
நான் தயாரித்து வழங்கிய அந்த ஒரே ஒரு படத்தினால் நான் என் குடும்பத்தில் ஐந்து உயிர்களை இழந்து உள்ளேன். அக்கா பையன், என் ஐயா, ஆயா மற்றும் மாமா என்று ஐந்து உயிர்களை இந்த திரைப்படத்தை தயாரித்ததினால் இழந்துள்ளேன் என்று மனமுருகிய அவர் பேசியுள்ளார். ஆனால் இப்பொழுது நான் மீண்டு வருகிறேன், படங்களில் நடிக்க துவங்கியுள்ளேன், வாடகை வீடு எனக்கு புதிதல்ல, நிச்சயம் என்னுடைய பழைய நிலைக்கு நான் மீண்டு வருவேன் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.