சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்.. எந்தெந்த தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளது?

Published : Dec 15, 2023, 10:44 AM IST
சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்.. எந்தெந்த தமிழ் படங்கள் திரையிடப்பட உள்ளது?

சுருக்கம்

21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது.

கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு தமிழக அரசின் ஆதரவுடன் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. அந்த வகையில் 21-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா சென்னை ராயப்பேட்டையில் நேற்று தொடங்கியது. அமைப்பின் தலைவர் சிவன் கண்ணன் தலைமையில் நடிகை பார்வதி நாயர் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

டிசம்பர் 21-ம் தேதி நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் மொத்தம் 57 நாடுகளின் 126 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்காக 25 தமிழ் படங்கள் அனுப்பப்பட்ட நிலையில், அதில் இருந்து 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

மேலும் இந்த திரைப்பட விழாவில் உலக சினிமாவில் 12 படங்களும், இந்திய சினிமாவில் 19 படங்களும் திரையிடப்பட உள்ளன. உலக சினிமாவில் தேர்வான படங்களில் 2 படங்களில் இந்தியாவை சேர்ந்தது.

இந்த திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 படங்களில் இருந்து சிறந்ததாக தேர்வு செய்யப்படும் முதல் 3 படங்களுக்கு ரூ.7 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும் உலக சினிமாவில் இருந்து தேர்வு செய்யப்படும் 3 சிறந்த படங்களுக்கு கோப்பை, சான்றிதழ் என மொத்தம் 9 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

 

சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட தடை! கேஜேஆர் ஸ்டூடியோ விளக்கம் அளிக்க உத்தரவு

போட்டிப்பிரிவில் திரையிட தேர்வான 12 தமிழ் படங்கள்

  1. அநீதி – இயக்குநர் வசந்தபாலன்
  2. அயோத்தி _ இயக்குநர் மந்திரமூர்த்தி
  3. கருமேகங்கள் கலைகின்றன. – இயக்குநர் தங்கர்பச்சான்
  4. மாமன்ன – இயக்குநர் மாரி செல்வராஜ்
  5. போர்தொழில் – இயக்குநர் விக்னேஷ் ராஜா
  6. ராவணக்கோட்டம் – இயக்குநர் விக்ரம் சுகுமாரன்
  7. சாயாவனம் – இயக்குநர் அனல்
  8. செம்பி – இயக்குநர் பிரபு சாலமன்
  9. ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன் – இயக்குநர் சந்தோஷ் நம்பிராஜன்
  10. உடன்பால் – இயக்குநர் கார்த்திக் சீனிவாசன்
  11. விடுதலை பாகம் 1 – இயக்குநர் வெற்றிமாறன்
  12. விந்தியா பாதிக்கப்பட்ட தீர்ப்பு V3 – இயக்குநர் அமுதவாணன்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?