சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட தடை! கேஜேஆர் ஸ்டூடியோ விளக்கம் அளிக்க உத்தரவு

Published : Dec 14, 2023, 10:23 PM ISTUpdated : Dec 14, 2023, 10:43 PM IST
சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை வெளியிட தடை! கேஜேஆர் ஸ்டூடியோ விளக்கம் அளிக்க உத்தரவு

சுருக்கம்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தையும், வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் வெளியிட 4 வாரங்களுக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு படங்களையும் தயாரிக்கும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தங்களுக்குத் தரவேண்டிய 14.70 கோடி ரூபாய் நிலுவைத் தொகையைத் தரவில்லை என்று கூறி டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடத்துள்ள அயலான் திரைப்படத்தை முதலில் 24 ஏ.எம். நிறுவனம் தயாரித்து வந்தது. அந்த நிறுவடனம் டி.எஸ்.ஆர். நிறுவனத்திடம் இருந்து ரூ.10 கோடி கடனாகப் பெற்றது. அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அந்தக் கடனை ஏற்றுக்கொண்டு படத்தைத் தயாரிக்க முன்வந்தது.

அதன்படி, கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பில் டி.எஸ்.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்துக்கு ரூ.3 கோடி முதல் தவணைத் தொகையாகச் செலுத்தப்பட்டது. ஆனால், அதற்குப் பின் மீதியுள்ள தொகையை செலுத்தவில்லை என்று டி.எஸ்.ஆர். நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மஹுவா மொய்த்ராவின் எம்.பி. பதவி பறிப்புக்கு எதிரான வழக்கு: நாளை விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்

அதில், தங்களுக்குச் செலுத்த வேண்டிய 14 கோடி 70 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் கே.ஜே.ஆர். நிறுவனம் படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் நிலுவைத் தொகையைக் கொடுக்கும் வரை அயலான், ஆலம்பனா படங்களை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்றும் டி.எஸ்.ஆர். நிறுவனம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரித்த நீதிபதி சரவணன், டி.ஆர்.எஸ் நிறுவனத்தின் வாதத்தில் முகாந்திரம் இருப்பதாகக் கூறி, அயலான் மற்றும் ஆலம்பனா படங்களை வெளியிட நான்கு வாரங்கள் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின்  அடுத்த விசாரணையை ஜனவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

அயலான் திரைப்படத்தை அடுத்த மாதம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடத் திட்டமிட்டிருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு வந்துள்ளது. இதேபோல நாளை வெளியாக இருந்த வைபவ் நடித்துள்ள ஆலம்பனா படத்தையும் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

DeepSouth! மனித மூளைக்கு சவால் விடும் முதல் சூப்பர் கம்ப்யூட்டர்! 2024 முதல் ஆக்‌ஷன் ஆரம்பம்!

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!