மகனை காப்பாத்த தான் இங்க வந்தேன்! கதறிய அழுத தாமரை செல்வி..!

Published : Oct 13, 2021, 10:45 AM ISTUpdated : Oct 13, 2021, 10:47 AM IST
மகனை காப்பாத்த தான் இங்க வந்தேன்! கதறிய அழுத தாமரை செல்வி..!

சுருக்கம்

பிக்பாஸ் (biggboss) வீட்டில் இன்று தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி (Thamarai Selvi) தன்னுடைய மகனை காப்பாற்ற தான் இங்கு வந்ததாக கூறியுள்ளது போட்டியாளர்களை கண் கலங்க வைத்துள்ளது.  

பிக்பாஸ் வீட்டில் இன்று தெருக்கூத்து கலைஞர் தாமரை செல்வி தன்னுடைய மகனை காப்பாற்ற தான் இங்கு வந்ததாக கூறியுள்ளது போட்டியாளர்களை கண் கலங்க வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: முழு பூசணிக்காயை சோத்துல மறைத்த இசைவாணி..! திருமணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேசலையே..! ஏன்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரத்தில் இருந்து, ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்கள் மற்றும் கடந்து வந்த பாதைகள் குறித்து கூறி வருகிறார்கள். அந்த வங்கியில் நேற்று, அக்ஷரா, ப்ரியங்கா, மற்றும் சிபி ஆகியோர் கூறிய நிலையில் தற்போது தாமரை செல்வி தன்னுடைய கதையை கூறும் புரோமோ வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் பேசுகையில், ‘என் பையனை என்னிடம் அவங்க காண்பிக்கவே இல்லை. நான் அவனைத் தேடிப் போனேன், அவங்க என்ன சொன்னாங்கனு தெரியல, நான் இங்கேயே இருந்துக்குறேனு சொல்லிட்டான். என்னிடமிருந்து என் பையன் பிரிஞ்சு ஆறு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. என் பையன் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் பட்ட கஷ்டம் எல்லாம் அவனுக்கு தெரியாமல் போய் விடுமோ என்று நான் கவலைப்படுகிறேன்.

மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்டு... சிங்கிள் பிளீட் சேலை கட்டி அசப்பில் அம்மா ஸ்ரீதேவி போலவே இருக்கும் ஜான்வி கபூர்

 

என்னிடம் என் பையன் பேசுவதில்லை, பார்ப்பதில்லை, இதனால் நான் தப்பு பண்ணிட்டேன் என எனக்கு தோணுது . அவனை காப்பாத்த தான்  நான் பிக்பாஸ் வந்தேன் என்று கதறி அழுதபடி கூறினார். இந்த காட்சி அங்கிருந்த பல போட்டியாளர்களை கண் கலங்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது புரோமோவை பார்த்தாலே தெரிகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!