நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்..!

Published : Oct 13, 2021, 08:21 AM IST
நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரங்கல்..!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) உள்பட, சிவாஜி கணேசன்(Sivaji Ganesan), முத்துராமன் (Muthuraman), ஜெயசங்கர் (Jai Shankar), கமல்ஹாசன் (Kamalhassan) போன்ற பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் (Srikanth)  நேற்று காலமானார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட, சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர், கமல்ஹாசன் போன்ற பல நடிகர்களுக்கு வில்லனாக நடித்த பிரபல நடிகர் ஸ்ரீகாந்த் நேற்று காலமானார். இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாக்களில் ஆக சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான படம் 'வெண்ணிற ஆடை'. இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். மறைந்த நடிகையும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவிற்கு முதல் முதலில் ஜோடியாக நடித்த நடிகரும் இவரே...

மேலும் செய்திகள்: ஹீரோ - ஹீரோயின்களை ஓரம் கட்டும் ரொமான்ஸ்... கணவரோடு கலர் ஃபுல்லாக திருமணநாள் கொண்டாடிய அறந்தாங்கி நிஷா!!

 

மேலும் செய்திகள்: ஜெயிலில் இருக்கும் மகன்... தீவிர மன உளைச்சலால் சாப்பிடாமல், தூங்காமல் தவிக்கும் ஷாருகான்...!

குறிப்பாக ரஜினி நடித்த பைரவி,  தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மகனாக நடித்ததால் தங்கப்பதக்கம் ஸ்ரீகாந்த் என்று பலரால் அறியப்பட்டவர். கடந்த சில வருடங்களாகவே, உடல்நல குறைவு காரணமாகவும், வயது மூப்பு காரணமாகவும் திரையுலகை விட்டு ஒதுங்கியே இருந்த ஸ்ரீகாந்த் நேற்று தன்னுடைய 82 ஆவது வயதில் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்... "என்னுடைய அருமை நண்பர் திரு ஸ்ரீகாந்த் அவர்கள் மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்". என்று ட்விட்டர் பக்கத்தின் மூலம் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?
யாரோட சொத்த யார் ஆட்டைய போடுறது: ஓ நீ தான் அந்த அர டிக்கெட்டா? அப்பத்தா எண்ட்ரியால் அனல்பறக்கும் எதிர்நீச்சல்!