பழம்பெரும் நடிகரும், சிவாஜி, ரஜினியுடன் நடித்தவருமான ஸ்ரீகாந்த் காலமானார்.
சென்னை: பழம்பெரும் நடிகரும், சிவாஜி, ரஜினியுடன் நடித்தவருமான ஸ்ரீகாந்த் காலமானார்.
undefined
தமிழ் சினிமாக்களில் ஆக சிறந்த இயக்குநர்களில் ஒருவரான ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளியான படம் வெண்ணிற ஆடை. இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தியின் நெருங்கிய நண்பரும் கூட.
சிவாஜி, முத்துராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட பலருடன் நடித்து புகழ் பெற்றவர். ரஜினி நடித்த பைரவி படத்திலும் நடித்துள்ளார். தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜியின் மகனாக நடித்ததால் தங்கப்பதக்கம் ஸ்ரீகாந்த் என்று பலரால் அறியப்பட்டவர்.
இந் நிலையில் 82 வயதான அவர் காலமாகிவிட்டார். அவரது மறைவு குறித்து தகவல் அறிந்த திரையுலகம் பெரும் சோகத்தில் உள்ளது. பல்வேறு திரையுலக பிரபலங்களும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.