
பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கொனேரு, திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு திரையுலகினர் மத்தியில் இளம் தயாரிப்பாளர்களில் ஒருவராக அறியப்படும் மகேஷ் கொனேரு, இன்று செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் மாரடைப்பால் இறந்தார். இந்த தகவலை பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் (Jr NTR) தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்து, தன்னுடைய நண்பரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்: ஜெயிலில் இருக்கும் மகன்... தீவிர மன உளைச்சலால் சாப்பிடாமல், தூங்காமல் தவிக்கும் ஷாருகான்...!
மகேஷ் கொனேரு ஒரு திரைப்பட பத்திரிகையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கியவர். பின்னர் தெலுங்குப் படங்களான 'காஞ்சே' மற்றும் 'பாகுபலி' ஆகிய படங்களுக்கு விளம்பரதாரராகவும் இருந்துள்ளார். அவர் ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது சகோதரர் கல்யாண் ராம் ஆகியோரின் விளம்பரதாரர்களாக என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்: 'ஜோதா அக்பர்' ஐஸ்வர்யா ராய்க்கே சவால் விடும் கெட்டப்பில் சாயா சிங்..!! கலக்கல் போட்டோஸ் ஷூட்...
ஜூனியர் என்டிஆர் இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "கனத்த இதயத்துடனும், நம்பிக்கை இழந்து கூறுகிறேன் என் அன்பு நண்பர் மகேஷ் கொனேரு இனி இல்லை என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துகிறேன். இந்த அதிர்ச்சியால் முற்றிலும் பேச முடியாமல் இருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரது நெருங்கிய மற்றும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். என தெரிவித்துள்ளார். ”
மகேஷ் கொனேரு ஈஸ்ட்கோஸ்ட் புரொடக்ஷன்ஸ் (Eastcoast Production) மூலம் கல்யாண்ராம் நடித்த '118', கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) நடித்த, 'மிஸ் இந்தியா', சத்யதேவ் (Sathyadev) நடித்த 'திம்மரசு' உட்பட சில படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் தமிழில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான பிகில் (Bigil) மற்றும் மாஸ்டர் (Master) ஆகிய படங்களை தெலுங்கில் டப் செய்து தெலுங்கில் வெளியிட்டார்.
மேலும் செய்திகள்: ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் அட்டை படத்தில் நடிகை நயன்தாரா..! வேற லெவெல் அழகில் தெறிக்க விட்ட புகைப்படம்..!
சமீபத்தில் விஜய்யுடன் (Vijay) இவர் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில் இன்று இவர் திடீர் என மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது தெலுங்கு திரையுலகத்தினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.