பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் காலமானார்..!!

By manimegalai a  |  First Published Oct 12, 2021, 8:44 PM IST

பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் வயது மூப்பு காரணமாகவும், உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 82 .


பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் (Srikanth) வயது மூப்பு காரணமாகவும், உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு வயது 82 .

ஸ்ரீகாந்த் மூத்த பழம்பெரும் நடிகர்களில் ஒருவர், 1965 ஆம் ஆண்டு ' வெண்ணிற ஆடை' படத்தின் மூலம் அறிமுகமாகி, சுமார் 200 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். அவர் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கியுள்ளார். இவர் முதல் படம் 'வெண்ணிற ஆடை' என்பதால் திரையுலகளில் பலராலும் 'வெண்ணிற ஆடை' ஸ்ரீகாந்த் என்றும் அழைக்கப்பட்டார்.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: ஹீரோ - ஹீரோயின்களை ஓரம் கட்டும் ரொமான்ஸ்... கணவரோடு கலர் ஃபுல்லாக திருமணநாள் கொண்டாடிய அறந்தாங்கி நிஷா!!

 

1965 மற்றும் 1979 க்கு இடையில் சுமார் 50 படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார், மேலும் சிவாஜி கணேசன், முத்துராமன், ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோருடன் துணை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 90 களில் முன்னணி நடிகர்களாக இருந்த ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்களுக்கு இணையான சம்பளம் பெரும் அதிரடி வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். வெள்ளித்திரையை தாண்டி குடும்பம், மங்கை போன்ற சீரியல்களிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பிரபல இளம் தயாரிப்பாளர் மாரடைப்பால் திடீர் மரணம்..!! அதிர்ச்சியில் திரையுலகினர்..!!

 

திரையுலகில் தன்னுடைய வாழ்க்கையை துவங்குவதற்கு முன்பாக, அமெரிக்க தூதரகத்தில் வேலை செய்தார். ஆனால் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக நாடகங்களில் சேர்ந்து சிறிய சிறிய வேடங்களில் நடிக்க துவங்கினார். இவரது துடிப்பான நடிப்பு, அழகு இவரை வெகு விரைவாகவே திரையுலகில் கொண்டு போய் சேர்த்தது. வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ஸ்ரீகாந்த். இந்த படத்தின் 4 புதிய முகங்களை இயக்குனர் சி.வி.ஸ்ரீதர், அதில் ஜெயலலிதா, வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் வெண்ணிரடை மூர்த்தி ஆகியோர். தமிழ் படங்களில் ஜெயலலிதாவுக்கு ஜோடியாக முன்னணி கதாநாயகனாக நடித்த முதல் ஆண் நடிகர் இவர்தான் என்பதும் குறிபிடித்தக்கது.

மேலும் செய்திகள்: ஜெயிலில் இருக்கும் மகன்... தீவிர மன உளைச்சலால் சாப்பிடாமல், தூங்காமல் தவிக்கும் ஷாருகான்...!

 

இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான 'குடியரசு'. இதன் பின்னர் உடல்நல பிரச்சனைகள் மற்றும் வயது மூப்பு காரணமாக திரையுலகை விட்டு விலகினார். சுமார் 44 ஆண்டும் இடைவிடாமல் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலமானார். இவருக்கு திரையுலகை சேர்ந்த பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். 

click me!