வாரிக்கொடுத்த ரஜினிகாந்த்... கைக்கு கிடைக்குமா நிவாரணம் என்ற ஏக்கத்தில் நலிந்த கலைஞர்கள்...?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 24, 2020, 05:41 PM IST
வாரிக்கொடுத்த ரஜினிகாந்த்... கைக்கு கிடைக்குமா நிவாரணம் என்ற ஏக்கத்தில் நலிந்த கலைஞர்கள்...?

சுருக்கம்

ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் சங்கமோ நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளது. 

இந்தியாவில் நாளுக்கு நாள் தனது கோர முகத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறை மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. கோடிகளில் சம்பளம் கொட்டும் கனவு உலகமாக இருந்தாலும், தினக்கூலிக்காக பணியாற்றும் சினிமா தொழிலாளர்கள் தான் அதிகம். 

25 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஒருவேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாகவும் நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் உதவிக்கரம் நீட்டினால் ஒருவேளை அரிசி கஞ்சியாவது நம்மால் அவர்களுக்கு கொடுத்து முடியும் என தென்னிந்திய சினிமா தொழிலாளர்கள் சம்மேளனமான ஃபெப்சி கோரிக்கை விடுத்திருந்தது.

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஃபெப்சி தொழிலாளர்களின் பசியை போக்குவதற்காக  50 லட்சம் ரூபாய் வழங்கினார். இதேபோன்று நடிகர் சங்கத்தில் உள்ள நலிந்த நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு உதவு செய்யும் படி முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தகவலை கேள்விப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சங்கத்தில் உள்ள 1000 நலிந்த கலைஞர்கள் மற்றும் உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கியுள்ளார். இதற்காக 24 டன்கள் மளிகை பொருட்களை அனுப்பி வைத்துள்ளார். 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழங்கிய நிவாரண பொருட்களை விநியோகிப்பது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாளை முதல் ஏப்ரல் 27ம் தேதி வரை 3 நாட்களுக்கு சாலிகிராமத்தில் உள்ள செந்தில் ஸ்டுடியோ வளாகத்தில் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றும், உறுப்பினர்கள் தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வந்து காலை 6 மணி முதல் காலை 8 மணி வரை பொருட்களை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க: கண்கலங்கிய சாய் பல்லவி... பெற்றோருடன் ‘அந்த’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநருக்கு வைத்த ஒற்றை கோரிக்கை...!

ஊரடங்கு நேரத்தில் பொது போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஆனால் நடிகர் சங்கமோ நேரில் வந்து நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ளும் படி கூறியுள்ளது. இதனால் பிற மாவட்டத்தில் மிகவும் மோசமான நிலையில் இருக்கும் நலிந்த நடிகர்களும், நாடக கலைஞர்களும் நிவாரணம் கைக்கு கிடைக்குமா? என்ற சோகத்தில் ஆழ்த்துள்ளனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

State Awards: மகளின் வெற்றியைக் காணாத தந்தை.! ரோபோ சங்கர் குடும்பத்திற்குத் தேடி வந்த மாநில அரசு விருதுகள்!
ட்ரிம் செய்யப்பட்டு ஓடிடியில் ரிலீஸ் ஆன துரந்தர்... அதிர்ச்சியில் ரசிகர்கள்