
உலகமே கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் தொற்றுக்கு அஞ்சு அல்லோலப்பட்டு வரும், நிலையில்... அதில் இருந்து, மக்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கட்சிகளின் சார்பாகவும், சமூக சேவை மையங்கள் மூலமாகவும், பிரபலங்கள் தானாக வந்தும் உதவிகளை அறிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கஷ்டப்பட்டு வரும் 1500 குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவு பொருட்களை நேற்று வழங்கினார். அதேபோல் நடிகர் கமலஹாசன் தன்னுடைய மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகவும் பல்வேறு உதவிகள் செய்து வருவதாக சமீபத்தில் கூட அறிக்கை வெளியிட்டு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசுக்கு எதிராக போராட்டத்தை தூண்டும் விதமாக, தவறான செய்திகளை பரப்பி வருவதாக கோவையில் இயக்கி வரும், இணையதள ஊடகத்தை சேர்ந்த 3 பேர் கைதி செய்யப்பட்டனர். இதில் அந்த செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட செய்தி ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும் என, தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் உள்ளோட்டர் வலியுறுத்தி வருகிறார்கள்.
மேலும் இதுகுறித்து மிகவும் ஆவேசமாக, பிரபல நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான உலக நாகயன் கமல்ஹாசன் பொங்கி எழுந்து ஒரு ட்விட் போட்டுள்ளார்.
அதில் இவர் கூறியுள்ளதாவது... "கோவையில் மருத்துவர்களுக்கு உணவில்லை, மக்களுக்கு உதவிகள் போய் சேரவில்லை என உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? தவறுகளை சரி செய்யாமல், உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம். ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை துறையை முடக்காதீர்கள். கைது செய்தவரை விடுதலை செய்யுங்கள்’ என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்".
கமலஹாசனின் ட்விட் இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.