
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3, 75 நாட்களைக் கடந்து பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில், கடந்த வார எலிமினேஷன் லிஸ்டில் சேரன், கவின், லாஸ்லியா, முகேன், ஷெரின் ஆகியோர் இருந்தனர். இதில் இயக்குனர் சேரன் வெளியேற்றப்பட்டு ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் என்பவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யார் வெல்வார்கள்? என்று கணித்ததன் மூலமாக சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர்.
அதுமட்டுமின்றி, மக்களவைத் தேர்தலில் மத்தியில் மோடி ஆட்சி அமையும் என்றும் தமிழகத்தில் திமுக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்று கணித்தார். அதன்படியே நடந்தது.
இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன்-3ல் யார் டைட்டில் வின்னர் என்பது குறித்து அவரிடம் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த அவர், 'பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய தேதி மற்றும் நேரத்தை வைத்து இதை கணித்துள்ளேன். கண்டிப்பாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தான் டைட்டிலை வெல்லும் வாய்ப்பிருக்கிறது. இரண்டாம் இடத்தில் பெண் ஒருவர் இடம்பெறுவார்' என்று தெரிவித்துள்ளார்.
அதன்படி பார்த்தால் தர்ஷன் அல்லது முகேன் டைட்டிலை வெல்லும் வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் போட்டியாளர்களில் பெண் போட்டியாளர்கள் என்றால் வனிதா, லாஸ்லியா, ஷெரின்.
இவர்களில் வனிதாவுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே, லாஸ்லியா அல்லது ஷெரின் இரண்டாம் இடத்தை பெற வாய்ப்புள்ளது என்று பாலாஜி ஜோதிடர் கணித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.