இயக்குநர் ராஜசேகர் இதனால் தான் இறந்து போனார் ! கதறி அழும் மனைவி சாரா !!

Published : Sep 09, 2019, 08:33 PM IST
இயக்குநர் ராஜசேகர் இதனால் தான் இறந்து போனார் !  கதறி அழும் மனைவி சாரா !!

சுருக்கம்

இரண்டு நாட்களுக்கு முன்பே கடுமையான மூச்சுத்திணறல் இருந்தும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாததால், லேட்டாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் தான் சிகிச்சை பலனின்றி இறந்து போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஜசேகர் சென்னை அடையாறு திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தவர். தனது நண்பர் ராபர்ட்டுடன் இணைந்து ‘ஒரு தலைராகம்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்தார். அதன்பிறகு இந்த இரட்டையர்கள் ‘பாலைவனச்சோலை’ படத்தை இயக்கினர். சுஹாசினி முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் வெற்றி பெற்றது.

பிரபு நடித்த மனசுக்குள் மத்தாப்பு, ராம்கி நடித்த சின்னப்பூவே மெல்லப்பேசு மற்றும் கல்யாண காலம், தூரம் அதிகம் இல்லை, பறவைகள் பலவிதம், தூரத்து பச்சை ஆகிய படங்களையும் இருவரும் டைரக்டு செய்தனர். பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படத்தில் ராஜசேகர் கதாநாயகனாக நடித்தார்.

இந்த படத்தில் அவர் பாடிய ‘ஒரு பொன்மாலை பொழுது வானமகள் நாணுகிறாள் வேறு உடை பூணுகிறாள்’ என்ற பாடல் இப்போதும் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கிறது. தொடர்ந்து பல படங்களில் நடித்தார். டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். இவருக்கு சாரா என்ற மனைவி உள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ராஜசேகருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. ஆனால் மருத்துவமனைச்குச் செல்வதற்கு தேவையான பணம் அவர்களிடத்தில் இல்லை உன கூறப்படுகிறது.

உடனடியாக அவர் நடித்து வரும் சீரியல் ஒன்றின் இயக்குநர் விக்ரமாதித்யாவிடம் பண உதவி கேட்டுள்ளனர். அவர் ஒரு சில இடங்களில் ஏற்பாடு செய்து சனிக்கிழமை இரவு தான் அவரும் பணம் கொடுத்துள்ளார்.

அன்று இரவே அவர் போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் பணம் கிடைக்கும் வரை ராஜசேகர் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்சுவலியைப் பொறுத்துக் கொண்டுதான் இருந்துள்ளார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜசேகர் மரணமடைந்தார். சிகிச்சைக்குப்  பணம் கிடைக்காமல் ஒரு திரைத் துறையைச் சேர்ந்தவர் மரணமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலருகே அமர்ந்து அழுதுகொண்டிருந்த போது கதறிஅழுபடி இதைத் தெரிவித்தபோது அனைவரம் அதிர்ச்சி அடைந்தனர்.

இதே போல் சிறுக சிறுக சேர்ந்து அண்மையில்தான் ராஜசேகர் ஒரு வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். அந்த வீடு கிரஹப் பிரவேசம் நடைபெறுவதற்கு முன்பே அவர் இறந்துபோனதும் அவரது மனைவிக்கும், குழந்தைகளுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி